திறமை இருந்தும் ஏன் இப்டி பண்றிங்க? உங்களை அவங்க தான் காப்பாத்தணும் – கேஎல் ராகுலுக்கு அசாருதீன் அட்வைஸ்

Advertisement

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஜனவரி 12ஆம் தேதியன்று நடைபெறும் 2வது போட்டியிலும் வென்று கோப்பை முன்கூட்டியே கைப்பற்ற களமிறங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் முக்கிய வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அதில் ஒரு கட்டத்தில் துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் சமீப கால சொதப்பலான செயல்பாடுகளால் அந்த பதவியை இழந்ததுடன் ஓப்பனிங் இடத்தையும் இழந்து தற்போது விக்கெட் கீப்பராக விளையாட வருகிறார்.

KL Rahul

2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிலையான தொடக்க வீரராக வாய்ப்பு பெற்ற அவரை அடுத்த தலைமுறை கேப்டனாகவும் வளர்க்க பிசிசிஐ முடிவெடுத்தது. ஆனால் 17 கோடி என்ற உச்சத்தை எட்டிய தன்னுடைய ஐபிஎல் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதாக ஆதாரத்துடன் நிரூபித்த ரசிகர்கள் கத்துக்குட்டிக்கு எதிராக ஓரிரு போட்டியில் அடித்து விட்டு 10 போட்டியில் வாய்ப்பு பெறுவதாகவும் விமர்சித்தனர்.

- Advertisement -

திறமை இருந்தும்:
அந்த நிலைமையில் 2022 ஐபிஎல் தொடருக்கு பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த அவர் பார்மை இழந்து ஏற்கனவே செயல்பட்டதை விட அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டது ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. இத்தனைக்கும் நல்ல திறமை இருந்தும் அவுட்டாகி விடுவோமோ அதனால் நமது இடம் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் விளையாடுவதே அவருடைய இந்த சொதப்பல்களுக்கு காரணமாகிறது. அதுவும் இப்போதெல்லாம் ஒரு சுமாரான பந்தில் கூட அவுட்டாகும் அளவுக்கு பயமே அவருக்கு தற்போது எதிரியாக உருவாகியுள்ளது.

Azharuddin

இந்நிலையில் நல்ல வீரரான கேஎல் ராகுலுக்கு தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பது மட்டுமே பிரச்சனையாக உள்ளதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் கூறியுள்ளார். குறிப்பாக சுமாரான பந்தில் கூட தவறான ஷாட்டை தேர்வு செய்து அவுட்டாகி விடுவதாக தெரிவிக்கும் அவர் இதிலிருந்து ராகுல் ராகுலுக்கு பயிற்சியாளர்கள் தான் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கேஎல் ராகுல் விஷயத்தில் நிலைத்தன்மையே பிரச்சனை என்று நான் நினைக்கிறேன். எனவே அவரது குறைபாடுகளை பயிற்சியாளர்கள் தான் சரி செய்ய வேண்டுமென்று கருதுகிறேன். என்னைப் பொறுத்த வரை அவர் நல்ல வீரர் ஆனால் அவரது ஆட்டத்தில் நிலைத்தன்மை இல்லை. மேலும் ராகுல் பல்வேறு விதங்களில் அவுட்டாகிறார். குறிப்பாக அவர் அவுட்டாகும் பந்துகள் நல்ல பந்துகள் அல்ல. முதலில் அவரிடம் மோசமான ஷாட் தேர்வு தான் பிரச்சனையை ஏற்படுகிறது” என்று கூறினார்.

Azharuddin

மேலும் 2023 உலகக் கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் ஆரம்பத்திலேயே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பார்முக்கு திரும்பியுள்ளது பற்றி அசாருதீன் மேலும் பேசியது பின்வருமாறு. “அந்த இருவரும் மிகச் சிறந்த கிளாஸ் நிறைந்த வீரர்கள். கடந்த காலங்களில் இதே போல் அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அதைத்தான் சாதனைகளும் கூறுகின்றன. அந்த வகையில் இந்த உலகக் கோப்பையில் விராட் மற்றும் ரோகித் ஆகிய இருவரும் அசத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள் எப்போதுமே சிறந்து விளங்கியுள்ளார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs SL : ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டும் அபார கம்பேக் கொடுத்த இளம் வீரர் – இலங்கையை அசால்ட்டாக மடக்கிய இந்தியா, இலக்கு இதோ

அத்துடன் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் வருங்கால கேப்டனாக கருதப்படும் ஹர்டிக் பாண்டியாவின் கேப்டன்சிப் பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “கேப்டனாக அணியை வழி நடத்தும் விதத்தில் ஹர்திக் சிறப்பாக தோற்றமளிக்கிறார். இருப்பினும் அவர் தன்னுடைய முதுகு பிரச்சனையில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் நல்ல ஆல் ரவுண்டரான அவர் காயத்தால் வெளியேறுவதை இந்தியா விரும்பாது. அவருக்கு இந்தியாவை வெற்றிகரமாக வழி நடத்த இளமையான அணியும் கிடைத்துள்ளது” என்று கூறினார்.

Advertisement