IND vs SL : ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டும் அபார கம்பேக் கொடுத்த இளம் வீரர் – இலங்கையை அசால்ட்டாக மடக்கிய இந்தியா, இலக்கு இதோ

- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வரும் இந்தியா முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் முதன்மை இந்திய அணி விளையாடி வரும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி ஜனவரி 12ஆம் தேதியன்று கொல்கத்தாவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் சஹாலுக்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு 4 பவுண்டரியுடன் அதிரடி தொடக்கத்தை கொடுக்க முயன்ற பெர்னாண்டோ 20 (17) ரன்களில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய குஷால் மெண்டிசுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் நுவனிடு பெர்னாண்டோ நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

ஃபீனிக்ஸ் குல்தீப்:
17 ஓவர்கள் நிலைத்து நின்று 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த இந்த ஜோடியில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் சவாலை கொடுக்கும் வகையில் செயல்பட்ட குசால் மெண்டிஸ் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி 34 (34) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த தனஞ்செயா டீ சில்வா அடுத்த ஓவரிலேயே அக்சர் பட்டேலிடம் கோல்டன் டக் அவுட்டாகி சென்ற நிலையில் மறுபுறம் 6 பவுண்டரியுடன் அரை சதம் கடந்து போராடிய பெர்னாண்டோ அவசரப்பட்டு 50 (63) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார்.

அந்த நிலைமையில் வந்த கேப்டன் சனாக்காவை கடந்த போட்டிகளைப் போல அதிரடியாக சவாலை கொடுப்பதற்கு முன்பாகவே குல்தீப் யாதவ் தன்னுடைய மாயாஜால சுழலில் வெறும் 2 (4) ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். அத்துடன் அடுத்த சில ஓவர்களில் மற்றொரு முக்கிய பேட்ஸ்மேன் அசலங்காவையும் 15 (21) ரன்களில் காலி செய்த அவரால் 126/6 என சரிந்த இலங்கை மிடில் ஓவர்களில் திண்டாடியது. அப்போது களமிறங்கி 3 பவுண்டரி 1 சிக்சருடன் மிரட்டலாக 21 (17) ரன்களை விளாசிய ஹசரங்காவை தனது அசுர வேகத்தால் அவுட்டாக்கிய உம்ரான் மாலிக் அடுத்த சில ஓவர்களில் சமிகா கருணரத்னேவை 17 (25) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அதனால் 178/8 என மேலும் சரிந்த இலங்கை 200 ரன்களை தாண்டுமா என அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்த போது பொறுப்பை வெளிப்படுத்திய வெல்லலேகே 3 பவுண்டரி 1 சிக்சருடன் 32 (34) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் ரஜிதா 17* (21) ரன்கள் எடுத்தார். அதனால் ஓரளவு தப்பிய இலங்கை 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களுக்கு சுருண்டது. பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதிலும் குறிப்பாக கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றும் அடுத்த போட்டியில் நியாயமின்றி நீக்கப்பட்ட குல்தீப் யாதவ் மனம் தளராமல் வாய்புக்காக காத்திருந்து இப்போட்டியில் களமிறங்கினார்.

இதையும் படிங்கஉழைக்காம எதுவும் வராது, சச்சின் டெண்டுல்கர் – விராட் கோலி ஆகியோரில் சிறந்தவர் யார்? விவாதத்துக்கு கங்குலி பதில்

அந்த வாய்ப்பில் 10 ஓவர்களில் 51 ரன்களை மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து 5.10 என்ற சிறப்பான எக்கனாமியில் பந்து வீசிய அவர் காயத்தால் சுடப்பட்டாலும் துவளாத ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து 216 என்ற இலக்கை துரத்துவதற்கு களமிறங்கியுள்ள இந்தியா சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றுவதற்கு போராட உள்ளது.

Advertisement