மத்தவங்க எல்லாம் போயிட்டாங்க. ஆனா ரோஹித் மட்டும் இங்கிலாந்து போக லேட் ஆகுமாம் – காரணம் இதுதான்

- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த தொடரின் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்தது. ஆனால் கடைசியாக நடைபெற இருந்த 5-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்குள் ஏற்பட்ட கொரோனா அச்சம் காரணமாக அந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டது. அப்படி தள்ளி வைக்கப்பட்ட அந்த போட்டி தற்போது ஜூலை 1-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்தன.

INDvsENG

- Advertisement -

அதேபோன்று இந்த ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமின்றி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதன் காரணமாக தற்போது ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று இந்தியாவில் இருந்து கிளம்பி இங்கிலாந்து சென்றடைந்தது. அதன்படி விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், புஜாரா, சுப்மன் கில், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் இங்கிலாந்து சென்ற தகவலை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டது.

rohith 1

ஆனால் ரோகித் சர்மா மட்டும் இன்னும் இங்கிலாந்து செல்லவில்லை என்றும் அவர் வருகிற ஜூன் 20-ஆம் தேதி தான் இங்கிலாந்து புறப்பட்டு செல்ல இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : ஐபிஎல் தொடரின் இறுதியில் காயம் காரணமாக அவதிப்பட்ட ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்ற பரிசோதனை நடைபெற்றது. அதில் ரோஹித் சர்மாவும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

மேலும் இந்த தொடரில் பங்கேற்கும் அளவிற்கு ரோஹித் சர்மா முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்ற தகவலும் தற்போது உறுதியாகியுள்ளது. இருப்பினும் அணியின் சம்மந்தப்பட்ட வேலைகள் காரணமாக அவர் புறப்படுவதில் சற்று தாமதமாகி உள்ளதாகவும் ரோஹித் வரும் ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்து பயணிக்க உள்ளார் என்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : ரோஹித்துக்கு அப்புறம் இவர்தான் இந்திய அணியின் கேப்டனாக இருக்கனும் – வாசிம் ஜாபர் கருத்து

அதேபோன்று ஜூலை 19-ஆம் தேதி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த பின்னர் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இங்கிலாந்து சென்று இந்திய அணியுடன் இணைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement