ரோஹித்துக்கு அப்புறம் இவர்தான் இந்திய அணியின் கேப்டனாக இருக்கனும் – வாசிம் ஜாபர் கருத்து

Jaffer
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை தொடர்ந்து இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் வருகிற 19-ம் தேதியுடன் முடிவடையும் வேளையில் சீனியர் வீரர்களை கொண்ட ஒரு அணி இங்கிலாந்திற்கும், ஹார்திக் பாண்டியா தலைமையிலான இரண்டாம் தர அணி அயர்லாந்து நாட்டிற்க்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

IND vs RSA Chahal Axar Patel

இதில் அயர்லாந்து சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டது. 17 பேர் கொண்ட இந்த இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளராக வி.வி.எஸ் லக்ஷ்மனன் செயல்பட உள்ளார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரானது ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது புதிய கேப்டன் பொறுப்பை ஏற்கும் பாண்டியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக குஜராத் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா முதல் சீனிலேயே சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தார்.

Hardik Pandya Dinesh Karthik

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறுகையில் : அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியை வழிநடத்த தகுதியான ஒரு வீரர் ஹர்திக் பாண்டியா தான். பிசிசிஐயின் இந்த முடிவு ஒரு அருமையான முடிவு.

- Advertisement -

என்னை பொறுத்தவரை ஒயிட் பால் கிரிக்கெட்டில் அவருக்கு அவ்வப்போது கேப்டன் பொறுப்புகளை வழங்க வேண்டும். குறிப்பாக ஒயிட் பால் கிரிக்கெட்டில் அவரை தொடர்ச்சியாக துணைக்கேப்டனாக செயல்பட வைக்கலாம். ரோஹித் சர்மா விளையாடாத போது அவர் தான் கேப்டன் பொறுப்பில் முதல் தேர்வாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : இந்தியாவின் நம்பர் ஒன் வியாபாரமாக ஐபிஎல் பிரமாண்ட வளர்ச்சி – ஒளிபரப்பு உரிம வரலாறு இதோ

நிச்சயம் ஹர்டிக் பண்டியா சிறந்த கேப்டனாக ஜொலிக்க முடியும். தனது பணிகளை ரசித்து செய்யும் அவர் மற்றவர்களிடம் இருந்து சிறப்பாக வேலை வாங்குகிறார். என்னை கேட்டால் ரோஹித்துக்கு அப்புறம் இந்திய அணியின் கேப்டனாக பாண்டியா தான் வரவேண்டும் என்றும் வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement