கோலியே பத்தியே பேசுறீங்க. இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் படைச்சிருக்க புதிய சாதனை – பத்தி தெரியுமா?

Captain
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி மொகாலி மைதானத்தில் மார்ச் 4-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பண்ட் 96 ரன்களையும், ஹனுமா விஹாரி 58 களையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Jadeja

- Advertisement -

இந்த போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி என்பதால் அவரின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் 45 ரன்களில் அவர் ஆட்டமிழந்து வெளியேறியது சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் கிரிக்கெட்டில் இது சகஜம் என்பதால் தற்போது விராத் கோலியின் இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒருபக்கம் இந்த முதலாவது டெஸ்ட் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணைக்குள் இருந்தாலும் இது விராட் கோலியின் நூறாவது போட்டி என்பதனால் கடந்த சில வாரங்களாகவே இந்த போட்டி குறித்தும், விராட்கோலி குறித்தும் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் இருந்தன.

INDvsSL cup

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவும் ஒரு சாதனை படைத்துள்ளார். அதைப்பற்றி யாரும் பெரிய அளவில் பேசவில்லை என்று இந்த செய்தியானது தற்போது இணையத்தில் அதிக அளவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த 60 ஆண்டுகளில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக அதிக வயதில் அறிமுகமான 2 ஆவது வயது முதிர்ந்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா தற்போது பெற்றுள்ளார். இந்திய அணிக்காக கும்ப்ளே தான் மிக அதிக வயதில் டெஸ்ட் கேப்டனாக அறிமுகம் ஆகியிருந்தார். கும்ப்ளே அறிமுகமாகும்போது 37 வயது 36 நாட்கள் இருந்த போது டெஸ்ட் கேப்டனாக அறிமுகமாகியிருந்தார்.

இதையும் படிங்க : சதத்தை தவறவிட்டாலும் தோனியை சமன் செய்து மெகா சாதனையை படைத்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

தற்போது அவருக்கு அடுத்து ரோகித் சர்மா 34 வயது 308 நாட்களில் முதல் போட்டியில் டெஸ்ட் கேப்டனாக விளையாடி வருகிறார். இது சம்பந்தமான சுவாரஸ்ய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement