சதத்தை தவறவிட்டாலும் தோனியை சமன் செய்து மெகா சாதனையை படைத்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Pant
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் இந்தியாவின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப்பின் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட அனுபவ வீரர்கள் புஜாரா மற்றும் ரகானே ஆகியோருக்கு பதிலாக ஹனுமா விஹாரி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. முன்னதாக இந்த போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

ஏமாற்றிய கோலி:
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணியில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் பல வெற்றிகளின் பங்காற்றிய அவருக்கு இந்த 100வது மைல்கல் போட்டியில் சிறப்பு தொப்பியை பரிசளித்து பிசிசிஐ கௌரவப்படுத்தியது. இதையடுத்து தனது பேட்டிங்கை துவக்கிய இந்தியாவிற்கு மயங்க் அகர்வால் 33 ரன்கள் மற்றும் ரோஹித் சர்மா 29 ரன்கள் எடுத்து ஓரளவு சுமாரான தொடக்கத்தை கொடுத்தார்கள். அடுத்ததாக வந்த ஹனுமா விஹாரியுடன் தனது 100வது போட்டியில் விளையாடும் விராட் கோலி ரசிகர்களின் பலத்த கரகோஷம் மற்றும் ஆரவாரத்திற்கிடையே களமிறங்கினார்.

100வது போட்டியில் சதமடித்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் அவுட்டான விராட் கோலி ஏமாற்றி பெவிலியனுக்கு திரும்பினார். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையுடன் அவர் அவுட்டானார். அவருடன் பேட்டிங் செய்த ஹனுமா விஹாரி அரைசதம் கடந்து 58 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 27 ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

தெறிக்கவிட்ட ரிஷப் பண்ட்:
இதனால் 175/4 என இந்தியா தடுமாறிய போது ஜோடி சேர்ந்தார் ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இலங்கை பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார்கள். இதில் ஒருபுறம் ஜடேஜா மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் சரவெடியாக அடிக்கத் தொடங்கிய ரிஷப் பண்ட் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து பட்டையை கிளப்பிய அவர் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 97 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 96 ரன்கள் எடுத்திருந்த போது யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார்.

அவருடன் பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 45* ரன்கள் எடுத்திருந்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 357/6 ரன்களை எடுத்துள்ள இந்தியா இப்போட்டியில் மிகவும் வலுவான நிலையை எட்டியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் 96 ரன்களில் அவுட்டான ரிஷப் பண்ட் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியனுக்கு திரும்பினார். குறிப்பாக பெவிலியன் அறையில் ரோகித் சர்மாவுக்கு அருகில் கடும் சோகத்துடன் கண் கலங்கியவாறு அவர் அமர்ந்திருந்த காட்சி இந்திய ரசிகர்களை சோகம் அடையச் செய்தது.

- Advertisement -

தோனிக்கு சமமாக ரிஷப் பண்ட்:
சத்தத்தை தவற விட்டாலும் இந்தியாவின் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி சமமாக அவர் உயர்ந்துள்ளார். ஆம் இன்றைய போட்டியையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இப்படி 90களில் அவுட்டாவது இது 5வது முறையாகும். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 90களில் அவுட்டான விக்கெட் கீப்பர் என்ற உலக அளவிலான பெயரை எம்எஸ் தோனியுடன் ரிஷப் பண்ட் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சொல்லப்போனால் எம்எஸ் தோனி 90 போட்டிகளில் விளையாடி 5 முறை 90களில் அவுட்டாகி 5 சதங்களை தவிர விட்டுள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் வெறும் 29 போட்டிகளிலேயே 5 முறை 90களில் அவுட்டாகி அவருக்கு சமமாக உயர்ந்துள்ளார். இதில் என்ன பெருமை என்று கேட்காதீர்கள் இது நிச்சயமாக ஒரு பெருமைதான். ஏனெனில் இந்த இளம் வயதிலேயே சவால் மிகுந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் சதம் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியால் கூட செய்ய முடியாத சரித்திர சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஆஸி ஜாம்பவான் ஷேன் வார்ன் அகால மரணம். பாவம் அவருக்கு இப்படி ஒரு ப்ராபலமா? – ரசிகர்கள் சோகம்

இருப்பினும் தோனி அளவுக்கு வர முடியாது என்றாலும் கண்டிப்பாக இவர் தன்னை முதல் ரிஷப் பண்ட்டாக முத்திரை பதித்துள்ளார். எனவே வரும் காலங்களில் இவர் தோனியையே மிஞ்ச வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

Advertisement