ஆஸி ஜாம்பவான் ஷேன் வார்ன் அகால மரணம். பாவம் அவருக்கு இப்படி ஒரு ப்ராபலமா? – ரசிகர்கள் சோகம்

Warne
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன் கடந்த 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி 2007 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்துள்ளார். 145 டெஸ்ட் போட்டிகளிலும் 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ள ஷேன் வார்ன் சர்வதேச கிரிக்கெட்டில் 1001 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

warne 1

- Advertisement -

அதோடு மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை கைப்பற்றிய போதும் 20 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்சி செய்கையிலும் அந்த அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார். கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு தூணாக செயல்பட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆற்றிய பங்கு அளப்பரியது. அதேபோன்று ஐபிஎல் வரலாற்றிலும் இவருக்கு என தனி இடம் உள்ளது.

ஏனெனில் பிசிசிஐ மூலம் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் முதலாவது சீசனில் 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியை வழிநடத்திய ஷேன் வார்ன் தலைமையில் தான் முதல் கோப்பையை ராஜஸ்தான் அணி முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஷேன் வார்ன்க்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் அவர் இன்று திடீரென அகால மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி வெளியானதும் ரசிகர்கள் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர்.

warne

52 வயதாகும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் முரளிதரனுக்கு அடுத்து இரண்டாம் இடம் வகிப்பவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் குறித்த பணிகளையே அவர் மேற்கொண்டு வந்தார். குறிப்பாக வர்ணனையாளர், ஆலோசகர், ஐபிஎல் தொடரின் பயிற்சியாளர் என பல்வேறு பணிகளை கிரிக்கெட் சார்ந்தே செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் வார்னே இன்று திடீரென மரணமடைந்த செய்தி வெளியானதால் உலகெங்கிலுமுள்ள அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். அதன்படி 52 வயதான வார்ன் தாய்லாந்து நாட்டில் உள்ள அவரது பங்களாவில் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது இந்த பங்களாவின் அருகே எந்தவித நடமாட்டமும் இல்லாமல் அவர் வீடு காணப்பட்டதால் அங்கு சென்று பார்க்கையில் ஷேன் வார்ன் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கார்டியாக் அரெஸ்ட் அதாவது ஹார்ட் அட்டாக் மூலம் தான் உயிரிழந்திருக்கிறார் என்று உறுதி செய்துள்ளனர்.

இதையும் படிங்க : இப்போ நல்லா தான் இருக்கும், ஆனா போகப்போக தான் ரோஹித் சர்மாவுக்கு தெரியும் – கோலியின் கோச் எச்சரிக்கை

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த ஷேன் வார்ன்க்கு 52 வயதிலேயே ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு பிரச்சினையா என்று அனைவரும் தங்களது வருத்தங்களை பகிர்ந்துள்ளனர். மேலும் அவரது இறப்பு செய்தி வெளியானதில் இருந்து தற்போது வரை இந்த செய்தி வைரலானது மட்டுமின்றி பலரும் அவரது இந்த மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement