இப்போ நல்லா தான் இருக்கும், ஆனா போகப்போக தான் ரோஹித் சர்மாவுக்கு தெரியும் – கோலியின் கோச் எச்சரிக்கை

Rajkumar
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். கடந்த 2011ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் காலடி எடுத்து வைத்த அவர் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் அதன்பின் ரன் மெஷினாக ரன்களை குவித்து இந்தியாவின் பல வெற்றிகளை பங்காற்றினார்.

Kohli 2

- Advertisement -

மேலும் 2014 – 2021 வரை கேப்டனாகவும் செயல்பட்ட அவர் தொடர்ந்து 5 வருடங்கள் இந்தியாவை உலகின் நம்பர்-1 டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்து 40 வெற்றிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இவ்வளவு சாதனைகள் படைத்துள்ள அவரை இந்த மைல்கல் போட்டியில் பிசிசிஐ சார்பில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு தொப்பியை பரிசளித்து கௌரவ படுத்தினார்.

புதிய பயணம்:
முன்னதாக இந்த டெஸ்ட் தொடர் முதல் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி புதிய பயணத்தை துவங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா அந்த சமயத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரில் 3 – 0 என்ற ஒயிட் வாஷ் வெற்றியை பெற்றுக் கொடுத்து முதல் தொடரிலேயே அமர்க்களப்படுத்தினார். இதனால் கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்த விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டு அந்த பதவி ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Rohith

அந்த வேளையில் டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி திடீரென அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் மற்றும் டி-20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் அடுத்தடுத்து ஒயிட்வாஷ் வெற்றிகளை பெற்றது. அதன் பின் தற்போது இலங்கைக்கு எதிராக நடந்த டி20 தொடரையும் 3 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா டி20 போட்டிகளில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

போகப்போக தான் கசக்கும்:
சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் இதுவரை ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் அபாரமாகவும் அசத்தலாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள ரோஹித் சர்மாவுக்கு போகப்போகத்தான் கேப்டன் பொறுப்பில் கடினமான சவால்கள் காத்திருக்கிறது என விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் ஒரு அமைதியான கூலான கேப்டனாக காட்சியளிக்கிறார். தற்போது கேப்டன்சிப் பொறுப்பில் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கும் அவருக்கு அதிர்ஷ்டவசமாக பலவீனமான அணிகளுடன் விளையாடி வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தது.

Rajkumar

எனவே இந்திய அணி தோற்கும் போது தான் அவர் மீதான குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கும். அப்போதுதான் என்ன தவறு நடந்தது, அந்த வீரருக்கு பதில் யாரை அனுப்பியிருக்க வேண்டும், 5 பவுலர்கள் விளையாடி இருக்க வேண்டுமா அல்லது 6 பவுலர்கள் விளையாடி இருக்க வேண்டுமா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மீது எழுப்புவார்கள். ஆனால் அது போன்ற நிலைமை அவர்களுக்கு ஏற்படாமல் இப்போது போலவே வெற்றி நடைபோட்டு உலக கோப்பையை வெல்ல வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல இந்தியாவின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்று இன்னும் 6 மாதங்கள் கூட முடியவில்லை. அதே போல் கேப்டன் பொறுப்பில் ஆரம்பகட்டத்தில் மட்டுமே இருக்கும் அவர் இதுவரை வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற கத்துக்குட்டி அணிகளை அதுவும் சொந்த மண்ணில் மட்டுமே எதிர்கொண்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலியின் செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள். கேப்டன் ரோஹித்தும் வருத்தம் – என்ன நடந்தது?

எனவே பெரிய அணிகளுடன் வெளிநாடுகளில் விளையாடும் போது தான் ரோகித் சர்மாவுக்கு உண்மையான சவால் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தலைமையில் இந்தியா தோற்கும் போது தான் அவர் மீது பல விமர்சனங்கள் ஆரம்பமாகும் என எச்சரிக்கையும் செய்துள்ளார். இருப்பினும் ரோகித் சர்மா தலைமையில் தொடர்ந்து இந்தியா வெற்றி நடைபோட்டு விரைவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையை இந்தியா வாங்க வேண்டும் என ராஜ்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Advertisement