- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பி.சி.சி.ஐ கொடுத்த சிறப்பு அனுமதியால் 6 ரன்களில் அவுட்டாகி சென்ற ரோஹித் மற்றும் கோலி – என்ன நடந்தது?

அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆனாலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அங்கு ஒருநாள் தொடரை இழந்தது. அதன் பின்னர் தற்போது ஒருமாத கால ஓய்வில் இருந்த இந்திய அணி வங்கதேசம் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் போன்ற தொடரில் விளையாடி வருகிறது.

ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சரிவை சந்திக்க காரணம் :

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அனைவரும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த துலீப் டிராபி தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்களை தவிர்த்து மற்ற அனைவரும் பங்கேற்றனர்.

- Advertisement -

குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பிசிசிஐ-யிடம் சிறப்பு சலுகை பெற்று அந்த தொடரில் விளையாடாமல் நேரடியாக வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கிய வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணியானது தற்போது ஆறு விக்கெடுகளை இழந்து 152 ரன்கள் குவித்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 19 பந்துகளை சிந்தித்து 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதேபோன்று நான்காவது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி 6 பந்துகளை சந்தித்து 6 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறினார். முக்கிய பேட்ஸ்மேன் இப்படி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் இந்திய அணி தற்போது தடுமாறி வருகிறது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சரிவை சந்திக்க பிசிசிஐ அளித்த சலுகையே காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அப்போவே மிஸ்ஸானது.. வங்கதேசத்தை இனிமேலும் கத்துக்குட்டின்னு சொல்ல முடியாது.. அஸ்வின் பேட்டி

ஏனெனில் முன்னணி வீரர்களான அவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நீண்ட நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் துலீப் டிராபி தொடரில் விளையாடியிருந்தால் அவர்களுக்கு நல்ல பயிற்சி இருந்திருக்கும். ஆனால் அதனை தவிர்த்து நேரடியாக அவர்கள் தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதாலே அவர்களின் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததாக பலரும் பேசி வருகின்றனர்.

- Advertisement -