IND vs WI : ஒரே தொடரில் தல தளபதியாக இரட்டை சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ரோஹித் மற்றும் விராட் கோலி

Rohit-and-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது ஜூலை 27-ஆம் தேதி இன்று முதல் நடைபெற உள்ளது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

IND-vs-WI-1

- Advertisement -

அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்ற முனைப்பு காட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், முன்னணி அனுபவ வீரரான விராத் கோலியும் ஜோடியாக சாதனை நிகழ்த்த காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி சார்பாக இதுவரை 243 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 30 சதம் மற்றும் 48 அரை சதங்களுடன் 9825 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் ரோஹித் சர்மா மேலும் 175 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களை தொடும் 15-ஆவது வீரராக அந்த சாதனையை நிகழ்த்துவார்.

Rohith-1

மேலும் இந்தியா சார்பாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, மஹேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 10,000 ரன்கள் தொடும் ஆறாவது வீரராகவும் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

- Advertisement -

அதேபோன்று மற்றொருபுறம் இந்திய அணியின் அனுபவ வீரர் விராட் கோலி 274 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 46 சதங்கள் 65 அரை சதங்கள் என 12,898 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் அவர் மேலும் 102 ரன்களை இந்த தொடரில் குவிக்கும் பட்சத்தில் 13,000 ரன் களை வேகமாக கடந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

இதையும் படிங்க : IND vs WI : சிராஜ், ஷமியை விட அவர் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச இந்திய ஃபாஸ்ட் பவுலர் – ஜாம்பவான் கர்ட்லி ஆம்பரோஸ் பாராட்டு

இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 போட்டிகள் இருப்பதனால் நிச்சயம் அவர்கள் இருவரும் இந்து தொடரிலேயே இந்த சாதனையை தொடுவார்கள் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement