IND vs WI : சிராஜ், ஷமியை விட அவர் தான் எனக்கு ரொம்ப பிடிச்ச இந்திய ஃபாஸ்ட் பவுலர் – ஜாம்பவான் கர்ட்லி ஆம்பரோஸ் பாராட்டு

Curtly Ambrose
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முன்னதாக சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என காலம் காலமாக மகத்தான பேட்ஸ்மேன்களை உருவாக்கி வரும் இந்தியா அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஜாம்பவான் ஸ்பின்னர்களையும் உருவாக்க தவறியதில்லை. இருப்பினும் நீண்ட காலம் எதிரணிகளை மிரட்டிய தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் என்று பார்த்தால் இந்தியாவில் கைவிட்டு எண்ணக்கூடிய அளவுக்கு இருந்தார்கள் என்றே சொல்லலாம்.

Shami-and-Siraj

- Advertisement -

குறிப்பாக இந்தியாவின் மகத்தான வேகப்பந்து வீச்சாளர் என்று சொன்னாலே ஆல் ரவுண்டரான ஜாம்பவான் கபில் தேவ் தான் முதலாவதாக வருவார். அவரை தொடர்ந்து ஜவகல் ஸ்ரீநாத் நீண்ட காலமாக அசத்திய நிலையில் ஜஹீர் கான் இடது கை வேகப்பந்து வீச்சாளராக ஸ்விங் செய்து ஏராளமான விக்கெட்களை எடுத்து தனக்கென்று முத்திரையை பதித்து சென்றார். அவர்களைத் தொடர்ந்து நவீன கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ் போன்றவர்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாக இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர்.

ஆம்ப்ரோஸ் பாராட்டு:
இந்நிலையில் தங்களுடைய காலத்தில் இந்தியா என்றாலே சுழல் பந்து வீச்சாளர்களுக்கு பெயர் போன நாடு என்ற நிலைமை இருந்ததாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது முகமது சிராஜ், முகமது ஷமி போன்றவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவதாக தெரிவிக்கும் அவர் அதில் ஜஸ்பிரித் பும்ரா தான் தமக்கு மிகவும் பிடித்த வேகப்பந்து வீச்சாளர் என்று கூறியுள்ளார். குறிப்பாக வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணிகளை திணறடிக்கும் பும்ரா வெற்றிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Bumrah

“எங்களுடைய காலங்களில் இந்தியாவைப் பற்றி பேசும் போது நாங்கள் உடனடியாக சுழல் பந்து வீச்சாளர்களை தான் குறிப்பிட்டு பேசுவோம். ஆனால் அவர்களும் சில தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளார்கள். குறிப்பாக கபில் தேவ் ஒரு மகத்தான ஆல் ரவுண்டர். அந்த வரிசையில் தற்போது பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் போன்ற சிறப்பான வீரர்கள் வந்துள்ளனர். அதில் பும்ராவை நான் அதிகமாக விரும்புகிறேன். ஏனெனில் அவர் வித்தியாசமானவர்”

- Advertisement -

“குறிப்பாக அவர் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களைப் போல் அதிக தூரம் ஓடி வந்து இதர அம்சங்களை பின்பற்றுவதில்லை. மாறாக சற்று நடந்து குறைவான தூரம் ஓடி வந்து 2 அல்லது 3 நடைகளில் தாவி பந்தை வீசுகிறார். அவ்வாறு வீசுவது முற்றிலும் வித்தியாசமானதாக இருப்பதுடன் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அது தான் அவருடைய ஸ்டைல். அது அவருக்கு மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது. மேலும் இந்தியா மட்டுமல்லாமல் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த நாட்டில் இருந்து சிறப்பாக செயல்பட்டாலும் நான் மகிழ்ச்சியடைவேன்”

ambrose 1

“அவர்கள் தங்களுடைய நாடு பெருமைப்படும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டால் நானும் பெருமையடைவேன். ஏனெனில் தற்போதைய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களே ராஜாங்கம் நடத்துகின்றனர். அதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் அசத்த முடிவதில்லை. போதாகுறைக்கு பிட்ச்களும் தற்போது சாதகமாக அமைக்கப்படுவதில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:இதே மாதிரி தெ.ஆ தொடரிலும் சொதப்புனா உங்க கேரியர் முடிஞ்சுரும் பாத்துக்கோங்க – சீனியர் வீரரை எச்சரித்த டிகே

அவர் கூறுவது போல 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பும்ரா இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். அதனாலேயே காயத்தால் அவர் விலகியது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. எனவே தற்போது குணமடைந்து வரும் அவர் 2023 உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு நிச்சயம் களமிறங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement