இதே மாதிரி தெ.ஆ தொடரிலும் சொதப்புனா உங்க கேரியர் முடிஞ்சுரும் பாத்துக்கோங்க – சீனியர் வீரரை எச்சரித்த டிகே

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியிலும் வெற்றி பெறுவதற்கான சூழல் உருவானது. இருப்பினும் மழை வந்து தடுத்ததால் அப்போட்டி ட்ராவில் முடிந்ததை தொடர்ந்து 1 – 0 (2) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதற்கு நிகரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியது. மேலும் இந்த தொடரில் அறிமுகமாக வாய்ப்பு பெற்ற யசஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக செயல்பட்டு சாதனைகளை படைத்த நிலையில் முகேஷ் குமாரும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

Ajinkya Rahane 3

- Advertisement -

ஆனால் பலவீனமான அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திர சீனியர் வீரர் அஜிங்க்ய ரகானே 8, 3 என 2 இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக 2011இல் அறிமுகமாகி 2015 உலக கோப்பையில் முதன்மை வீரராக விளையாடிய அவர் நாளடைவில் மெதுவாக விளையாடியதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டார்.

டிகே எச்சரிக்கை:
இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலியின் இடத்தில் கேப்டனாக பொறுப்பேற்று சதமடித்து இந்தியாவை வெற்றி பாதைக்கு திருப்பினார். அத்துடன் முக்கிய வீரர்கள் காயமடைந்த போது வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற இளம் வீரர்களை வைத்தே காபா கோட்டையை தகர்த்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற வைத்த அவர் அதன் பின் சதமடிக்காமல் இருந்ததால் கடந்த 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்டார்.

Rahane

ஆனாலும் ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமும் ஐபிஎல் 2023 தொடரில் யாருமே எதிர்பாராத வகையில் சென்னை அணியில் அபாரமாகவும் செயல்பட்ட காரணத்தால் காயமடைந்த ஸ்ரேயாஸ்க்கு பதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தேர்வான அவர் இந்தியாவை இன்னிங்ஸ் அவமான தோல்வியிலிருந்து காப்பாற்றியதால் மீண்டும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பில் மீண்டும் சொதப்பினாலும் அடுத்ததாக டிசம்பரில் நடைபெறும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஒருவேளை தென்னாப்பிரிக்க தொடரில் அசத்த தவறினால் ரகானேவின் கம்பேக் அத்துடன் முடிவதற்கு வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அஜிங்க்ய ரகானேவுக்கு இது சுமாரான தொடராக அமைந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் மீண்டும் தேர்வான அவர் இத்தொடரில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டது ஆச்சரியமாக அமைந்தது”

Dinesh-Karthik-1

“அந்த நிலையில் பேட்டிங் செய்வதற்கு சில வாய்ப்புகளை பெற்ற அவர் 2 தருணங்களிலும் சுமாராகவே செயல்பட்டார். ரகானேவை பொறுத்த வரை “தொடர்ச்சியாக செயல்படுதல்” என்ற ஒரே வார்த்தை தான் நீண்ட காலமாக பிரச்சினையாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் அதன் காரணமாகவே ஏற்கனவே அவர் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை இழந்தார். இருப்பினும் இந்த தொடரை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் அறிவார்”

- Advertisement -

“ஆனாலும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான விமானத்தில் அவர் இருக்க வேண்டிய வீரர் என்று நீங்கள் கருதுவீர்கள். ஏனெனில் அழுத்தமான பெரிய தொடர்களில் அவர் தன்னுடைய தரத்தை காட்டி சிறப்பாக செயல்படுவார் என்ற உணர்வு உங்களிடம் இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக 5000 டெஸ்ட் ரன்கள் அடித்த இந்திய வீரர்களில் ரகானே மட்டுமே 40க்கும் குறைவான (38.46) பேட்டிங் சராசரியை கொண்டுள்ளார்.

rahane

இதையும் படிங்க:IND vs WI : வெ.இ தொடரில் ஜாம்பவான்கள் கபில் தேவை மிஞ்சி கோர்ட்னி வால்ஷ் – ஆல் சாதனை உடைக்கப்போகும் ரவீந்திர ஜடேஜா

இருப்பினும் அழுத்தமான வெளிநாட்டு தொடர்களில் அசத்துவார் என்ற என்ற காரணத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பும் பட்சத்தில் புஜாரா போலவே கம்பேக் கொடுத்தாலும் வந்த வாக்கில் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement