வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மீண்டும் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியா களமிறங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்குகிறது.
அதன் காரணமாக இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார், யாதவ், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட முதன்மை வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது. அதனால் டெஸ்ட் தொடரை போலவே இந்த தொடரிலும் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மறுபுறம் பலவீனமான அணியாக மாறியுள்ள வெஸ்ட் இண்டீஸ் வரலாற்றில் முதல் முறையாக 2023 உலக கோப்பைக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.
ஜடேஜா அசத்துவாரா:
இருப்பினும் 1975, 1979 ஆகிய உலகக் கோப்பைகளை வென்ற மகத்தான வெஸ்ட் இண்டீஸ் இந்த வீழ்ச்சியிலிருந்து வலுவான இந்தியாவை தோற்கடித்து மீள்வதற்கு சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் ஷாய் ஹோப் தலைமையில் சிம்ரோன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், கெய்ல் மேயர்ஸ் போன்ற தரமான வீரர்களுடன் களமிறங்க உள்ளது. அதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டு நிறைய சாதனைகளை படைக்க காத்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் நம்பிக்கை நட்சத்திர ஆல் ரவுண்டராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 29 போட்டிகளில் 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்த 3வது பவுலர் என்ற பெருமையை அவர் தற்சமயத்தில் அனில் கும்ப்ளேவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரை போலவே ஜாம்பவான் அனில் கும்ப்ளேவும் 41 விக்கெட்களை எடுத்து அந்த பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார்.
இந்நிலைமையில் இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் 4 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர் என்ற ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் சாதனையை உடைத்து ரவீந்திர ஜடேஜா புதிய சாதனையை படைப்பார். இதுவரை இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலராக கோர்ட்னி வால்ஷ் 38 போட்டிகளில் 44 விக்கெட்களை எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் ஜாம்பவான் கபில் தேவ் 43 விக்கெட்டுகளுடன் உள்ளார்.
எனவே இத்தொடரில் இன்னும் 4 விக்கெட்டுகளை எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பந்து வீச்சாளர் என்ற கபில் தேவ் சாதனையும் தகர்த்து இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்த பவுலர் என்ற கோர்ட்னி வால்ஷ் ஆல் டைம் சாதனையையும் உடைத்து ஜடேஜா புதிய சாதனைகளை படைப்பார்.
இதையும் படிங்க:இந்த ஒரு விஷயத்துல கவனமா இருந்தா போதும். இந்தமுறை உலகக்கோப்பை நமக்குத்தான் – கபில் தேவ் அட்வைஸ்
கடந்த 2019 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு போராடியதிலிருந்தே முற்றிலும் புதிய பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள அவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் அசத்தும் மதிப்புக்கு வீரராக ஜொலித்து வருகிறார். அத்துடன் ஐபிஎல் 2023 ஃபைனலில் மிகச் சிறப்பாக ஃபினிஷிங் கொடுத்தது முதல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அசத்தியது வரை தற்சமத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இந்த தொடரில் 4 விக்கெட்டுகளை எடுத்து மேற்குறிப்பிட்டது போல் ஜாம்பவான்களின் சாதனையை தகர்ப்பார் என்று உறுதியாக நம்பலாம்.