இந்த ஒரு விஷயத்துல கவனமா இருந்தா போதும். இந்தமுறை உலகக்கோப்பை நமக்குத்தான் – கபில் தேவ் அட்வைஸ்

Kapil-Dev
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பிறகு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சிறப்பான அணி இருந்தும் கோப்பையை இந்திய அணி தவறவிட்டது.

Rohit Kuldeep Yadav Virat Kohli KL Rahul India

- Advertisement -

இதன் காரணமாக இம்முறை சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றாக வேண்டும் என்ற உறுதியுடன் இந்திய அணி களமிறங்க இருக்கிறது. இன்னும் உலகக்கோப்பை தொடருக்கு சில மாதங்களே உள்ள வேளையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் தேர்வு மற்றும் இந்திய அணியின் செயல்பாடு குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் 1983-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனான கபில் தேவ் இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெறுவதற்காக மிகவும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

IND

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவில் இந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அணி எந்த மாதிரி அறிவிக்கப்படும் என்று தெரியவில்லை. இருந்தாலும் மற்ற அணிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் இந்திய அணியின் தேர்வு நிச்சயம் இருக்கும் என்பதை நாம் நம்பலாம்.

- Advertisement -

அதோடு இம்முறை இந்தியாவில் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளதால் நிச்சயம் நமது வீரர்கள் தயாராக இருப்பார்கள் என்று நம்புகிறேன். அதோடு தற்போது இந்திய அணியில் இருக்கும் ஒரே ஒரு பிரச்சனை வீரர்களுக்கு ஏற்படும் காயம் மட்டும்தான்.

இதையும் படிங்க : IND vs WI : முதல் ஒன்டே நடைபெறும் பார்படாஸ் மைதானம் எப்படி? மழை வருமா – வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

எனவே இந்த உலகக் கோப்பை தொடரில் காயத்திலிருந்து நமது அணியின் வீரர்கள் பாதுகாப்பாக இருந்தால் நிச்சயம் எதிர்வரும் இந்த 50 ஓவர் உலககோப்பையை வெல்லலாம் என்று கபில் தேவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement