IND vs WI : முதல் ஒன்டே நடைபெறும் பார்படாஸ் மைதானம் எப்படி? மழை வருமா – வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Kensington Oval Barbadas Bridgetown Stadium Ground
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கி தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முதன்மை வீரர்களுடன் இந்தியா களமிறங்குவதால் இத்தொடரிலும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் 2023 உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் அவமானத்தை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அதிலிருந்து மீண்டெழுந்து வெற்றி பாதையில் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே ஷாய் ஹோப் தலைமையில் சிம்ரோன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப் போன்ற தரமான வீரர்களை கொண்டுள்ள அந்த அணியும் முடிந்தளவுக்கு இத்தொடரில் வலுவான இந்தியாவை எதிர்கொண்டு வெற்றிக்காக போராட தயாராகியுள்ளது.

- Advertisement -

பார்படாஸ் மைதானம்:
அதனால் இருநாட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு பார்படாஸில் இருக்கும் பிரிட்ஜ்டவுன் நகரில் இருக்கும் கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 1871இல் தோற்றுவிக்கப்பட்டு லண்டன் லார்ட்ஸ் போன்ற பெவிலியனை கொண்ட இந்த மைதானம் 28000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1985 முதல் ஒருநாள் போட்டிகளை நடத்தி வரும் இந்த மைதானத்தில் இதுவரை 45 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் வெஸ்ட் இண்டீஸ் 17 போட்டிகளிலும் வெளிநாட்டு அணிகள் 22 போட்டிகளிலும் பொதுவான அணிகள் 5 போட்டிகளிலும் வென்றுள்ளன. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது.

- Advertisement -

குறிப்பாக 2002க்குப்பின் 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக இப்போது தான் இந்த மைதானத்தில் இந்தியா ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை எந்த இந்திய பேட்ஸ்மேனும் சதமடிக்காத நிலையில் அதிகபட்சமாக தினேஷ் மோங்கியா 74 ரன்கள் எடுத்துள்ளார். அதே போல இந்த மைதானத்தில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக அஜித் அகர்கர் மற்றும் தினு யோகண்ணன் (தலா 3) ஆகியோர் உள்ளனர்.

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் பிரிட்ஜ்டவுன் நகரில் போட்டி நாளன்று 20% மட்டுமே மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இந்த போட்டி மழையின் குறுக்கீடு இல்லாமல் முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
ஆரம்ப காலங்களில் முழுவதுமாக பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வந்த பார்படாஸ் மைதானம் சமீப காலங்களில் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடைசியாக 2022இல் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து 303 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்தது. ஆனாலும் இயற்கையை வெல்ல முடியாது என்பது போல் பெரும்பாலும் இங்குள்ள பிட்ச் பவுலர்களுக்கே சாதகமாக இருந்து வருகிறது.

குறிப்பாக ஆரம்பத்தில் புதிய பந்தை ஸ்விங் செய்து வேகப்பந்து வீச்சாளர்கள் சவாலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் நேரம் செல்ல செல்ல ஸ்பின்னர்கள் இந்த மைதானத்தில் அதிக ஆதிகத்தை செலுத்துபவர்களாக இருக்கின்றனர். எனவே கால சூழ்நிலை புரிந்து நிலையாக பேட்டிங் செய்தால் மட்டுமே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்க முடியும். இந்த மைதானத்தில் வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 230 மற்றும் சராசரி 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 200 ஆகும்.

இதையும் படிங்க:IND vs WI : முதல் ஒன்டே நடைபெறும் பார்படாஸ் மைதானம் எப்படி? மழை வருமா – வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

இருப்பினும் இங்கு வரலாற்றில் 19 போட்டிகளில் மட்டுமே முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 25 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement