ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரில் ரோஹித், கோலி கம்பேக் – முக்கிய வீரருக்கு ஓய்வு

IND
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணியானது நாடு திரும்பியுள்ளது.

அப்படி நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரானது ஜனவரி 11-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் துவங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ள வேளையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் கடந்த ஓராண்டாக ஓய்வில் இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளனர். அதன்படி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் ரோஹித் சர்மாவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட உள்ளது.

- Advertisement -

அதேபோன்று சூரியகுமார் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறாத வேளையில் கே.எல் ராகுல் கம்பேக் கொடுக்க உள்ளார். மேலும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு பணிச்சுமை காரணமாக இந்த தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : வீட்டுல தூங்கி ஆஸி தொடரிலும் இந்த தப்பை செய்யாதீங்க.. இந்திய அணிக்கு கவாஸ்கர் கோரிக்கை

அதனை தவிர்த்து இளம் வீரர்கள் பலருக்கு இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதோடு டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் இதுவே இந்திய அணிக்கு கடைசி டி20 தொடர் என்பதனால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement