வீட்டுல தூங்கி ஆஸி தொடரிலும் இந்த தப்பை செய்யாதீங்க.. இந்திய அணிக்கு கவாஸ்கர் கோரிக்கை

Sunil Gavaskar 59
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை மழைக்கு மத்தியில் சமன் செய்து அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியா முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

இருப்பினும் 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவில் குறைந்தபட்சம் தொடரை சமன் செய்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. குறிப்பாக வலுவான தென்னாப்பிரிக்காவை முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா கேப் டவுன் மைதானத்தில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியை வென்ற ஆசிய அணியாக சாதனை படைத்தது.

- Advertisement -

கவாஸ்கர் கோரிக்கை:
அதனால் முதல் போட்டியில் வென்றிருந்தால் இந்நேரம் தொடரை வென்றிருக்கலாமே என்பது இந்திய ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. முன்னதாக சவாலான தென்னாப்பிரிக்காவில் சாதிக்க முன்கூட்டியே பயணித்து பயிற்சி போட்டிகளில் விளையாடத் தவறியதே முதல் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்று சுனில் கவாஸ்கர் ஏற்கனவே விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலாவது அதே தவறை செய்யாமல் முன்கூட்டியே பயணித்து பயிற்சி போட்டிகளில் விளையாடுங்கள் என்று இந்திய அணிக்கு கோரிக்கை வைக்கும் அவர் இது பற்றி பேசியுள்ளது பின்வருமாறு. “இத்தொடரில் சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் சந்தித்த தோல்வி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளில் முதல் போட்டியிலேயே நீங்கள் தோற்றால் பின்னர் தொடரை வெல்வது கடினமாகி விடும் என்பதை காண்பித்துள்ளது”

- Advertisement -

“இந்த சூழ்நிலையில் சரியாக அடுத்த வருடம் இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கு முந்தைய 2 சுற்றுப்பயணத்தில் அங்கே நீங்கள் பதிவு செய்த வெற்றிகளை இம்முறையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால் அதற்கான திட்டத்தை இப்போதே துவக்க வேண்டும். அதற்கு முன்பாக வங்கதேசம் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக செப்டம்பர் மற்றும் நவம்பரில் 2, 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளதாக அட்டவணை காண்பிக்கிறது”

இதையும் படிங்க: உங்களுக்கு போட்டியா அந்த 2 பேர் வந்துட்டாங்க.. கேஎல் ராகுலை எச்சரித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி டிசம்பர் துவக்கத்தில் நடைபெறும். எனவே அதற்கு முன்பாக வீட்டில் இருக்காமல் இந்திய அணியினர் அங்கே பயணித்து சில முதல் தர பயிற்சி போட்டிகளில் விளையாட வேண்டும்” என்று கூறினார். அதாவது 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்களை வென்று இந்தியா சாதனை படைத்தது. அதை இம்முறை தக்க வைத்துக்கொள்ள இந்தியா பயிற்சி போட்டிகளுடன் தயாராக வேண்டும் என்று அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement