- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இனி 7 கோடி ஒப்பந்தத்தில் இருக்க முடியாது.. அடுத்த சரிவை சந்திக்கப்போகும் ரோஹித் மற்றும் கோலி – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் இருபெரும் தூண்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர்கள் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வினை அறிவித்துள்ளார்கள்.

அடுத்த சரிவை சந்திக்கப்போகும் ரோஹித் மற்றும் கோலி :

எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்கள் இருவரும் இன்றி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதால் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக கடினமான தொடராக மாறியுள்ளது அதோடு இளம் வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் தற்போது சரிவை சந்திக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் இந்திய வீரர்களின் திறனுக்கு ஏற்ப அவர்களுக்கு வருடாந்திர ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

அந்த வகையில் ஏற்கனவே இவர்கள் இருவரும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஏ ப்ளஸ் பிரிவில் 7 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் அவர்கள் ஓய்வு பெற்று விட்டதால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்கள்.

- Advertisement -

எனவே அவர்களது ஒப்பந்தப்பட்டியல் மறுபரிசீலனுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஒரு ஃபார்மெட்டில் மட்டுமே விளையாடும் வீரர்களுக்கு அதிகபட்ச சம்பளத்தை வழங்க முடியாது. இதன் காரணமாக தற்போது ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றிருக்கும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏ பிரிவிற்கோ அல்லது பி பிரிவுக்கோ மாற்றப்படுவார்கள்.

இதையும் படிங்க : அவங்க 2 பேரும் ரிட்டயர்டு ஆனது இங்கிலாந்து அணிக்கு தான் நல்லது – மொயின் அலி கருத்து

அப்படி மாற்றப்படும் பட்சத்தில் 7 கோடி ரூபாய் என்ற சம்பளத்திலிருந்து அவர்கள் 5 கோடி அல்லது 3 கோடிக்கு சம்பள ஒப்பந்தப்பட்டியலுக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -