அவங்க 2 பேரும் ரிட்டயர்டு ஆனது இங்கிலாந்து அணிக்கு தான் நல்லது – மொயின் அலி கருத்து

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் இம்மாத இறுதிக்குள் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

அவங்க 2 பேரும் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு : மொயின் அலி

இவ்வேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராத் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் அவர்களுக்கு பதிலாக எந்தெந்த வீரர்கள் அணியில் இடம்பெறப் போகிறார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதோடு சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி எவ்வாறு இந்த தொடரை எதிர்கொள்ளப்போகிறது என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றது இங்கிலாந்து அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளதாக அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எதிர்வரும் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முதல் தொடரில் இங்கிலாந்து அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த நேரத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான அவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது எங்களுக்கு தான் கூடுதல் பலத்தை அளித்துள்ளது.

- Advertisement -

அந்த இரண்டு வீரர்களுமே இந்திய அணிக்காக பலகாலம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள். சச்சின் டெண்டுல்கர் பிறகு மைதானத்தில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் வீரராக விராட் கோலி திகழ்ந்து வந்தார். விராட் கோலி விளையாடினாலே டெஸ்ட் போட்டி என்றாலும் ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கும். அந்த அளவிற்கு அவர் ஒரு மிகச் சிறப்பான வீரர்.

இதையும் படிங்க : அதை துவங்குதற்காக ரோஹித், கோலியின் முடியாத கேரியரை.. கம்பீர் முடிச்சுட்டாரு.. அஸ்வின் பேட்டி

அதேபோன்று கடந்த சில ஆண்டுகளாக ரோகித் சர்மாவும் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி வந்தார். அவர்கள் இருவரும் இல்லாதது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மட்டும் இழப்பு கிடையாது இந்திய அணிக்கும் மிகப்பெரிய இழப்பு. அவர்கள் இருவரும் இந்த தொடரில் விளையாடாதது எங்களுக்கு தான் சாதகம் என மொயின் அலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement