அதை துவங்குதற்காக ரோஹித், கோலியின் முடியாத கேரியரை.. கம்பீர் முடிச்சுட்டாரு.. அஸ்வின் பேட்டி

R ashwin 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இந்நாள் கேப்டன்களாக இருந்த ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றுள்ளனர். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற அவர்கள் ஜோடியாக சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இருப்பினும் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது.

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுமாறு அவர்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தனர். ஆனால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா 12 வருடங்கள் கழித்து வெல்ல ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் முக்கிய பங்காற்றினர். அதனால் அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

முழுமையாக முடியாத கேரியர்:

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மாவை கழற்றி விட தேர்வுக்குழு முடிவு எடுத்தது. அதற்கு முன்பாக ரோஹித் சர்மா மரியாதையுடன் விடை பெற்றார். அவருடைய நண்பனாக விராட் கோலியும் ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களுக்கு சோகத்தைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்காக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் முடியாத கேரியரை கௌதம் கம்பீர் முடித்து வைத்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோஹித், கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒன்றாக ஓய்வு பெறுவார்கள் என்ற ஐடியா எனக்கு இல்லை. இது இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனையான காலமாகும். இது கௌதம் கம்பீர் சகாப்தம் உண்மையாகத் துவங்கும் நேரம் என்று நான் சொல்வேன். இவர்களுடைய ஓய்வு காரணமாக இங்கிலாந்து மண்ணுக்கு முற்றிலும் புதிய இந்திய அணி செல்லும்”

- Advertisement -

முடித்த கம்பீர்:

“அதில் ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே சீனியர் வீரராகவும் கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவராகவும் இருப்பார். அவர் கேப்டன்ஷிப் பொறுப்பில் செயல்படுவதற்கு தகுதியானவர். ஆனால் அதை அவருடைய உடல் தகுதியை வைத்து தேர்வாளர்கள் முடிவு செய்வார்கள். அவர்களுடைய ஓய்வு தலைமை பண்பில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். குறிப்பாக இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் விராட் கோலியின் எனர்ஜி, ரோஹித் சர்மாவின் அமைதி மிஸ் செய்யப்படும்”

இதையும் படிங்க: டெஸ்டில் ஓய்வு பெற்ற கிங் விராட் கோலிக்காக.. ஆர்சிபி ரசிகர்கள் கொடுக்கப் போகும் நெகிழ்ச்சி ஃபேர்வெல்

“உண்மையில் விராட் கோலியிடம் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1 – 2 விளையாடுவதற்கான எனர்ஜி இருக்கிறது. ரோஹித் குறைந்தது இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வரை விளையாடுவார் என்று நான் கருதினேன். கடந்த 10 – 12 வருடங்களாக இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகள் சிறந்த ஃபார்மட்டாக இருந்துள்ளது. ரோஹித் இங்கிலாந்து தொடர் வரை விளையாடியிருக்க வேண்டும். ஒருவேளை அவர் நன்றாக விளையாடியிருந்தால் இந்நேரம் கேப்டனாக தொடர்ந்திருப்பார்” என்று கூறினார்.

Advertisement