கிரிக்கெட் வீரர்களை ஆடுமாடு போல நடத்தும் ஐபிஎல் ஏலத்தை நிறுத்துங்க – சி.எஸ்.கே வீரர் கோரிக்கை

CSK
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து வாங்கியுள்ளன. இதை அடுத்து இந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளுடன் ஏற்கனவே உள்ள மும்பை, சென்னை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது.

IPL-bcci

- Advertisement -

முன்னதாக கடந்த 2018க்கு பின்பு முதல் முறையாக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்றார்கள். அதன் இறுதியில் 204 வீரர்கள் மட்டும் 551 கோடி ரூபாய் செலவில் அந்தந்த அணிகளுக்கு விளையாட ஒப்பந்தமானார்கள்.

மனதிற்கு மதிப்பில்லா ஐபிஎல்:
இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன வீரராக இந்தியாவின் இளம் வீரர் இஷான் கிசான் 15.5 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். அவருடன் தீபக் சஹர் 14 கோடி, ஷ்ரேயஸ் ஐயர் 12.25 கோடி என பல இந்திய வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்கள். அவர்களைப் போலவே லியம் லிவிங்ஸ்டன், நிக்கோலஸ் பூரான், டேவிட் வார்னர் போன்ற பல வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போனார்கள்.

suresh-raina

இருப்பினும் இந்த ஏலத்தில் ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஒரு சில முக்கியமான நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஏலம் போகவில்லை. அதை விட இந்தியாவின் நட்சத்திர வீரர் மற்றும் மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட எந்த அணியும் வாங்காதது பல ரசிகர்களை சோகமடைய செய்தது. பொதுவாகவே ஐபிஎல் ஏலத்தால் வறுமையில் வாடிய எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் ஒரே வருடத்தில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளார்கள். அதேபோல் கடந்த வருடம் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போனவர்கள் இந்த வருடம் குறைந்த தொகைக்கு ஏலம் போவதும் இந்த வருடம் பல கோடி ரூபாய்களை அள்ளிய வீரர்கள் அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் இருந்தே காணாமல் போவதும் இயல்பாக ஒன்றாக மாறிவிட்டது.

- Advertisement -

அதேபோல் இந்த ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டால் அவரை வாங்குவதற்கு பல கோடி ரூபாய்களை செலவு செய்ய காத்திருக்கும் அணிகள் அதே வீரர்கள் வெறும் ஒரு சீசனில் சொதப்பினால் அவர்களை தூக்கி எறிவதற்கும் தயங்குவது கிடையாது. எடுத்துக்காட்டாக சுரேஷ் ரெய்னா, டேவிட் வார்னர் போன்ற வீரர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி பல ரசிகர்களும் அறிவார்கள். மொத்தத்தில் இந்த ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் வீரர்களும் மனிதர்களே என்பதை புரிந்து கொள்ளாத ஐபிஎல் அணிகள் பணத்தை முக்கியமாக பார்க்கிறார்களே தவிர அவர்களின் மனதை பார்ப்பதில்லை.

uthappa 1

நாங்கள் ஆடுமாடுகளா:
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் வீரர்கள் கால்நடைகளைப் போல நடத்தப்படுவதாக இந்திய வீரர் ராபின் உத்தப்பா வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “ஐபிஎல் ஏலமானது நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பு எழுதிய தேர்வு விதிமுறை போன்ற உணர்வை கொடுக்கிறது. அதில் கிடைக்கும் முடிவுகளுக்காகக் நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. உண்மையை சொல்வதானால் நாங்கள் கால்நடைகளை போல நடத்தப்படுவதாக உணர்கிறோம். இது மிகவும் மகிழ்ச்சிகரமான உணர்வு அல்ல.

- Advertisement -

குறிப்பாக இந்தியாவில் அது கிரிக்கெட்டைப் பற்றிய விஷயம் என்று நான் நினைக்கிறேன். வீரர்களின் செயல்பாடுகளை பற்றி ஒரு கருத்தை வைத்திருப்பது ஒரு விஷயம். ஆனால் நீங்கள் எவ்வளவுக்கு விற்கப்படுகிறீர்கள் என்பது பற்றி ஒரு கருத்து இருப்பது வேறு விஷயம்” என கூறியுள்ளார்.

Uthappa-2

அதாவது ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் வீரர்களின் மனதிற்கு சுத்தமாக மதிப்பில்லை என வேதனை தெரிவித்துள்ள ராபின் உத்தப்பா அதில் இந்த வீரர்கள் இவ்வளவு கோடிகளுக்கு விலை போவார்களா என்பது பற்றி பலரும் பேசும்போது கிரிக்கெட் வீரர்களின் மனம் மோசமான உணர்வை பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2 கோடி ரூபாய்களுக்கு ராபின் உத்தப்பா மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

ட்ராப்ட் சிஸ்டம் வேண்டும்:
இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “விற்காத வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது. அது அவர்களுக்கு இனிமையாக இருக்காது. நீண்ட காலமாக ஒரு அணியில் இருந்துவிட்டு பின்னர் தேர்வு செய்யப்படாமல் போனால் அது மிகவும் வருத்தமளிக்கும். திடீரென்று ஒரு கிரிக்கெட் வீரராக உங்களின் மதிப்பு யாராவது உங்களுக்காக எவ்வளவு செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியதாக மாறிவிடும். அது மிகவும் குழப்பமானது. அந்த பைத்தியக்காரத்தனத்திற்கு எந்த முறையும் இல்லை”

இதையும் படிங்க : இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக ரோஹித் நியமனம். 2 வார்த்தையில் பதிலளித்த – மைக்கல் வாகன்

“கிரிக்கெட் வீரர்கள் கடந்த 15 வருடங்களாக மிகக் கடுமையாக உழைத்து அந்த இடத்தை பிடிக்கிறார்கள். “இது மிகவும் தற்செயலானது என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் பின்னர் வந்திருந்தால் ஒருவேளை நீங்கள் அதிக பணம் சம்பாதித்திருப்பீர்கள்” என ஒரு சிலர் கிரிக்கெட் வீரர்களிடம் கூறுகிறார்கள். நீங்கள் ஏலத்தில் முன்கூட்டியே வந்திருந்தால் போதுமான பணம் இருந்திருக்கும். எனவே நீங்கள் அதிகமாக சம்பாதித்திருப்பீர்கள் என கூறுகிறார்கள். எனவே இந்த ஐபிஎல் ஏலம் சிஸ்டத்துக்கு பதில் டிராப்ட் சிஸ்டம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்” என உத்தப்பா கூறியுள்ளார்.

அதாவது தற்போது நடைமுறையில் உள்ள ஐபிஎல் பல கிரிக்கெட் வீரர்களின் மனதை காயப்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ள ராபின் உத்தப்பா அதற்கு பதில் டிராப்ட் சிஸ்டம் முறையை ஐபிஎல் நிர்வாகம் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அவர் கூறுவது போல பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் தொடரில் வீரர்களை தேர்வு செய்ய இதுபோன்ற டிராப்ட் சிஸ்டம் முறை கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement