இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக ரோஹித் நியமனம். 2 வார்த்தையில் பதிலளித்த – மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக பயணித்து வந்த விராட் கோலி 2021-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்ததும் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து தான் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக கேப்டனாக செயல்படுவேன் என்று கூறிய கூறிய வேளையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் போது ஒருநாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதன் காரணமாக ஏற்பட்ட விரக்தி காரணமாக அந்த சுற்றுப்பயணம் முடிவடைந்த பின்னர் தான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி திடீரென அறிவித்தார். இதன் காரணமாக இந்திய அணிக்கு புதிய கேப்டன் டெஸ்ட் கேப்டன் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் வென்றதை அடுத்து தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட கையோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புதிய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இப்படி ரோகித் சர்மா புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக எதிர்கொண்டு வீழ்த்தியதை தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் ரோகித் சர்மாவின் இந்த டெஸ்ட் கேப்டன் நியமனம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டதற்கு தனது கருத்தினை அளித்திருந்த அவர் “கிரேட் சாய்ஸ்” என இரண்டே வார்த்தைகளில் ரோஹித்தின் டெஸ்ட் கேப்டன் நியமனம் குறித்து தனது பதிலை அளித்துள்ளார்.

இதையும் படிங்க : இலங்கை தொடருக்கு முன்னதாக தீபக் சாஹருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – சி.எஸ்.கே அணிக்கும் பின்னடைவு

எப்போதுமே இந்திய அணி குறித்து ஏதாவது ஒரு கருத்தினை கூறி சர்ச்சையில் சிக்கி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் விமர்சனத்தை பெரும் மைக்கல் வாகன் தற்போது ரோகித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து நல்ல முறையில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளதால் இம்முறை ரசிகர்களின் கேலி, கிண்டலில் இருந்து அவர் தப்பித்துள்ளார் என்றே கூறலாம்.

Advertisement