இலங்கை தொடருக்கு முன்னதாக தீபக் சாஹருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் – சி.எஸ்.கே அணிக்கும் பின்னடைவு

Deepak
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியானது இங்கு நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டிலுமே ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து வருத்தத்துடன் நாடு திரும்பியுள்ளது. இதனையடுத்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியானது இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

Bishnoi

- Advertisement -

பிப்ரவரி 24-ஆம் தேதி அதாவது நாளை மறுதினம் துவங்கும் இந்த தொடரானது மார்ச் மாதம் இரண்டாம் வாரம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் சில வீரர்கள் காயம் காரணமாக இடம் பெற முடியாமல் போனது. அந்த வகையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீபக் சாஹர் காயமடைந்துள்ளார்.

நடைபெற்று முடிந்த 3 ஆவது டி20 போட்டியின் பவர் பிளே ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வேளையில் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக 1.5 ஓவர்கள் மட்டுமே வீசி நிலையில் மீதமுள்ள ஓவர்களை வீச முடியாமல் வெளியேறினார். அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயர் அவரது ஓவர்களை வீசி முடித்தார். இந்நிலையில் காயம் காரணமாக வெளியேறிய தீபக் சாஹர் தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவது சந்தேகமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

deepak 1

ஏனெனில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வெளியேறிய தீபக் சாகருக்கு தற்போது முதல் நிலை தசை கிழிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கமாக இது போன்ற காயம் சரியாக ஆறு வாரங்கள் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் இலங்கை தொடர் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் முதல் சில போட்டிகளை அவர் தவற விடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே கே.எல் ராகுல், அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக பெங்களூர் சென்று தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தீபக் சாஹரும் அங்கு செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இலங்கை தொடருக்கான அணியில் இருந்து அவர் வெளியேற வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக அவர் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இது அவருக்கு புதுசு தான். இருந்தாலும் பினிஷிங் ரோல்ல அவரு சூப்பரா ஆடுறாரு – ராகுல் டிராவிட் மகிழ்ச்சி

பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி 14 கோடி கொடுத்து மிகப்பெரிய தொகைக்கு அவரை முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அணியில் தேர்வு செய்துள்ள வேளையில் தற்போது அவர் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாதது சிஎஸ்கே அணிக்கும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement