இது அவருக்கு புதுசு தான். இருந்தாலும் பினிஷிங் ரோல்ல அவரு சூப்பரா ஆடுறாரு – ராகுல் டிராவிட் மகிழ்ச்சி

Dravid
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் அடைந்த மோசமான தோல்விக்கு பிறகு தற்போது தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 ஆண்டுகளுக்கு பிறகு தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. உலக கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி இந்திய அணியானது அடுத்ததாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 3 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

indvswi

- Advertisement -

அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக தயாராகி வரும் இந்திய அணி இம்முறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு அணியில் சில மாற்றங்களை செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே கடந்த ஐபிஎல் தொடரின்போது கொல்கத்தா அணிக்காக வெங்கடேஷ் ஐயர் பேட்டிங், பவுலிங் என ஆல்-ரவுண்டராக அசத்தினார்.

அவரே தற்போது இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியாவின் இடத்தில் அவருக்கு பதிலாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 92 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து இரண்டு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை அவர் ஆடியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின்போது 18 பந்துகளில் 33 ரன்கள் குவித்த அவர் மூன்றாவது போட்டியின்போது 19 பந்துகளில் 36 ரன்கள் குவித்து அசத்தினார்.

venky

அதோடு தீபக் சாகர் காயமடைந்து வெளியேறியபோது பந்துவீச்சிலும் தனது பங்கினை அளித்த அவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்படி தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து உள்ள வெங்கடேஷ் ஐயர் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்காக துவக்க வீரராக விளையாடி வந்தார். ஆனால் இந்திய அணியில் அவருக்கு டாப் ஆர்டரில் இடம் கிடைக்காது. எனவே மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடும் அவர் ஒரு பினிஷராகவும் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய ரோல் வேறு. ஆனால் இந்திய அணிக்காக அவர் விளையாடும் ரோல் வேறு இதனை அவரிடம் தெளிவாக எடுத்துரைத்து விட்டோம். அவரும் அந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு தற்போது பின் வரிசையில் களமிறங்கி தனது சிறப்பான செயல்பாட்டை அளித்து வருகிறார் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நாங்கள் இந்தத் தொடரின் மூலம் ஒரு சவால் ஒன்றினை அவருக்கு கொடுத்தோம். அதாவது எந்த இடத்தில் களம் இறங்கினாலும் விளையாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் படி அவர் பின்வரிசையில் களம் இறங்கினாலும் ஒவ்வொரு முறையும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாளுக்குநாள் முன்னேறி வியக்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே டீம் இல்லனா இந்த அணிக்காக விளையாடனும். அதான் என் ஆசை – தீபக் சாகர் விருப்பம்

அவருடைய பேட்டிங் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. அதோடு அவர் இந்திய அணியில் ஆறாவது பவுலராகவும் செயல்படுவதால் நிச்சயம் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது என்று டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே ஹர்திக் பாண்டியா பந்து வீசாமல் இருந்து வருவதால் ஆறாவது பவுலருக்கான ஆப்ஷனில் சிக்கல் நிலவி வந்தது. அதனை தீர்க்கும் விதமாக தற்போது வெங்கடேஷ் ஐயர் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு ஏகபோக வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement