சி.எஸ்.கே டீம் இல்லனா இந்த அணிக்காக விளையாடனும். அதான் என் ஆசை – தீபக் சாகர் விருப்பம்

deepak
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இந்திய அணிக்காக விளையாட தகுதியற்றவர் என்று மிக இளம்வயதிலேயே கிரேக் சாப்பல் மூலம் நிராகரிக்கப்பட்ட இவர் மீண்டும் தனது அசாத்தியமான திறமை மூலமாக 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பிடித்தார்.

Chahar-3

- Advertisement -

அந்த தொடரில் தோனி தலைமையிலான புனே அணிக்காக விளையாடினார். சென்னை அணி தடை செய்யப்பட்டபோது புனே அணியில் விளையாடிய தீபக் சஹர் அதன்பிறகு 2018 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் சுமார் 80 லட்ச ரூபாய்க்கு சிஎஸ்கே அணியில் விளையாட தேர்வானார். அதன் பின்பு இவரது பவுலிங் பார்ம் அடுத்த கட்டத்திற்கு சென்றது. தோனியின் தலைமையின் கீழ் இவர் விளையாடியபோது இவரது கரியர் உச்சத்திற்கு சென்றது.

அதன்பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்த இவர் தற்போதும் இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்து விளையாடி வருகிறார். நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் கூட பவர்பிளே ஓவர்களில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி தன் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார்.

chahar 1

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி இவரை மீண்டும் 14 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இந்த வருட ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன இஷான் கிஷனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய தொகைக்கு சிஎஸ்கே அணிக்காக இவர் விளையாட தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

தீபக் சாஹரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டி போட்டும் சிஎஸ்கே விட்டுக்கொடுக்காமல் 14 கோடி ரூபாய் சென்று அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஏனெனில் பவுலிங் மட்டுமின்றி சமீபகாலமாக பேட்டிங்கில் கவனம் செலுத்தி வரும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் நிச்சயம் உதவியாக இருப்பார் என்று சி.எஸ்.கே அணி அவரை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இல்லை என்றால் எந்த அணிக்காக விளையாடி இருப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : கவலைப்படாதீங்க. ஒரே போட்டியை வச்சி அவரை டீம்ல இருந்து தூக்கிட மாட்டோம் – டிராவிட் ஆதரவு

சென்னை அணி என்னை இந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார்கள். எனக்கும் சென்னை அணியில் விளையாட வேண்டும் என்பதே ஆசை. அதன்படி மீண்டும் சி.எஸ்.கே அணிக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சி. ஒருவேளை சென்னை அணியை தவிர்த்து வேறு ஒரு அணிக்கு நான் விளையாட வேண்டும் என்று நினைத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட விரும்புகிறேன் என்று தீபக் சாகர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement