இந்தியாவுக்கு என்ன செய்யணும்ன்னு அவங்களுக்கு தெரியும்.. நீங்க சொல்லாதீங்க.. விராட் கோலி மீது உத்தப்பா அதிருப்தி

Robin Uthappa 2
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் பெங்களூரு அணிக்காக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 77 ரன்கள் அடித்த அவர் பெங்களூரு முதல் வெற்றியை பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும் தனி ஒருவனாக போராடிய அவர் 83* (59) ரன்கள் அடித்தார்.

அந்த வகையில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்றே சொல்லலாம். அதே சமயம் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அவர் விளையாடுவாரா என்பது தற்சமயத்தில் கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பெரும்பாலான பிட்ச்கள் சற்று மெதுவாக இருக்கும்.

- Advertisement -

உத்தப்பா அதிருப்தி:
மறுபுறம் பெரும்பாலான சமயங்களில் விராட் கோலி நிதானமாக துவங்கி கடைசியில் தான் அதிரடியாக விளையாடக்கூடிய அணுகு முறையை கொண்டுள்ளார். எனவே 2024 டி20 உலகக் கோப்பையில் அவரை கழற்றி விட்டு இளம் வீரர்களை தேர்வு செய்ய இந்திய தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளதாக கடந்த வாரம் செய்திகள் தீயாக பரவியது.

ஆனால் வரலாற்றில் முறையாக அமெரிக்காவிலும் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பையை தம்மை வைத்து விளம்பரப்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது அறிவேன் என்று விராட் கோலி சமீபத்தில் தெரிவித்தார். எனவே அதில் இந்தியாவுக்காக விளையாடுவதற்கான திறமையும் தெம்பும் தம்மிடம் இப்போதும் உள்ளதாக சொன்ன விராட் கோலி தேர்வு குழுவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவருடைய இந்த கருத்து பற்றி ராபின் உத்தாப்பா அதிருப்தியுடன் பேசியுள்ளது பின்வருமாறு. “கடந்த போட்டியில் அவர் சொன்னது தேவையற்றது என்று நான் நினைக்கிறேன். அவர் அதை சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் அவருடைய திறமை மற்றும் அவரால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி இங்கே யாரும் கேள்வி கேட்கவில்லை என்று நான் நினைக்கிறேன். பேட்டிங்கை பொறுத்த வரை விராட் கோலி கிளாஸ் நிறைந்தவர். ஆனால் விராட் கோலி அப்படி இல்லை”

இதையும் படிங்க: 314 ரன்ஸ்.. சிரிக்க வைக்கும் காமெடியை நிகழ்த்திய வங்கதேசத்தை.. மீண்டும் வெச்சு செய்யும் இலங்கை

“டி20 உலகக் கோப்பையில் அங்கமாக இருக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருக்கிறது. இருப்பினும் இந்தியாவின் நலனுக்காக இளம் வீரர்களைக் கொண்ட அணியை தேர்வு செய்ய வேண்டுமா? அல்லது ஏற்கனவே சோதிக்கப்பட்டு சாதித்த மூத்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமா என்பது தேர்வாளர்களை பொறுத்தது. ஆனாலும் இங்கே விராட் கோலி டி20 உலகக் கோப்பைக்கு செல்ல விரும்புகிறேன் என்பதை கூறினார். கடைசியாக ஒரு ஸ்கோரை கொடுக்க விரும்புகிறேன் என்று சொல்ல விரும்புகிறார்” என ஜியோ சினிமா சேனலில் கூறினார்.

Advertisement