314 ரன்ஸ்.. சிரிக்க வைக்கும் காமெடியை நிகழ்த்திய வங்கதேசத்தை.. மீண்டும் வெச்சு செய்யும் இலங்கை

SL vs BAN Review
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இலங்கை 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி மார்ச் 30ஆம் தேதி துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு மதுசங்கா மற்றும் கருணரத்னே ஆகியோர் நிதானமாக விளையாடி 96 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதில் மதுசங்கா அடித்து 57 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த குசால் மெண்டிஸ் தனது பங்கிற்கு நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

டிஆர்எஸ் காமெடி:
அவருடன் சேர்ந்து எதிர்ப்புறம் அசத்திய கருணரத்னே இரண்டாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 86 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 23 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து பேட்டிங் செய்த குசால் மெண்டிஸ் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 93 ரன்கள் எடுத்த போது அவுட்டான அவர் சதத்தை நழுவ விட்டார்.

அடுத்ததாக வந்த தினேஷ் சண்டிமல் 34*, கேப்டன் டீ சில்வா 15* ரன்களும் எடுத்த போது முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. தற்போதைய நிலைமையில் முதல் நாளிலேயே 314/4 ரன்கள் அடித்துள்ள இலங்கை இந்த போட்டியிலும் வங்கதேசத்துக்கு எதிராக வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் நிதானமாக விளையாடிய குசால் மெண்டீஸ் 29 ரன்களில் டைஜுல் இஸ்லாம் வீசிய 44வது ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்டார்.

- Advertisement -

குறிப்பாக தடுப்பாட்டம் விளையாட நினைத்த அவர் லேசாக இறங்கி சென்று எந்த தடுமாற்றமும் இல்லாமல் பந்தை தெளிவாக தடுத்து நிறுத்தினார். ஆனால் முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த வங்கதேச வீரர் நஜ்முல் சான்டோ அந்த பந்து அவருடைய காலில் பட்டதாக நினைத்தார். அதை உறுதி செய்வதற்காக சக வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவர் கடைசியில் ரிவியூ எடுத்தார்.

இதையும் படிங்க: சிவம் துபே மாதிரி 2 பிளேயர்ஸை கழற்றி விட்டா எப்படி ஜெயிக்க முடியும்.. ஆர்சிபி’யை விளாசிய ஹர்பஜன்

ஆனால் மூன்றாவது நடுவர் அதை சோதித்துப் பார்த்த போது குஷால் மெண்டீஸ் பந்து பட்ட பேட்டுக்கும் காலுக்கும் இடையே அரை அடி இடைவெளி இருந்தது நன்றாக தெரிந்தது. அதனால் கொஞ்சமும் யோசிக்காத 3வது நடுவர் “இதெல்லாம் ஒரு ரிவ்யூவா” என்பது போல் உடனடியாக அவுட் கொடுக்க மறுத்து விட்டார். மறுபுறம் பந்து நடு பேட்டில் தெளிவாகப் பட்டதற்காக ரிவியூ எடுத்து காமெடி செய்த வங்கதேசத்தின் செயலை வர்ணனையாளர்கள் “ஓ டியர்” என்று சிரித்துக்கொண்டே வர்ணித்தனர்.

Advertisement