சிவம் துபே மாதிரி 2 பிளேயர்ஸை கழற்றி விட்டா எப்படி ஜெயிக்க முடியும்.. ஆர்சிபி’யை விளாசிய ஹர்பஜன்

Harbhajan Singh
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் இலட்சியத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடி வருகிறது. அதற்கேற்றார் போல் விளையாடாத அந்த அணி இதுவரை கள்மிறங்கிய 3 போட்டிகளில் 2 தோல்விகளை பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக விராட் கோலியை தவிர்த்து பேட்டிங்கில் கேப்டன் டு பிளேஸிஸ், மேக்ஸ்வெல், க்ரீன் போன்ற நட்சத்திர வீரர்கள் இதுவரை பெரிய ரன்கள் அடிக்கவில்லை.

அதை விட பேட்ஸ்மேன்கள் அடிக்கும் ரன்களை பந்து வீச்சில் வள்ளலாக மாறி எதிரணிக்கு வாரி வழங்கும் ஆர்சிபி பவுலர்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து வருகின்றனர். எனவே இந்த அணியையும் இது போன்ற சுமாரான பவுலிங் கூட்டணியையும் வைத்துக் கொண்டு ஆர்சிபி கோப்பையை வெல்வது கடினம் என்று நிறைய பேச்சுக்கள் காணப்படுகின்றன.

- Advertisement -

ஹர்பஜன் கருத்து:
இந்நிலையில் இப்போதைய ஆர்சிபி அணியில் சிராஜ் தவிர்த்து தரமான பவுலர் இல்லை என்று ஹர்பஜன் விமர்சித்துள்ளார். குறிப்பாக சஹால் மற்றும் ஹஸரங்கா ஆகிய 2 ஸ்பின்னர்களை கழற்றி விட்டு பெங்களூரு தவறு செய்ததாகவும் ஹர்பஜன் கூறியுள்ளார். அத்துடன் சிஎஸ்கே அணியில் சிவம் துபேவை போன்ற வீரர்களுக்கும் பெங்களூரு நிர்வாகம் ஆதரவு கொடுப்பதில்லை என்றும் ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

அதனாலேயே பெங்களூரு வெற்றி பெற தடுமாறுவதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பவுலர்கள் எங்கே? ஐபிஎல் 2024 தொடரில் அவர்களிடம் நல்ல பவுலர்கள் இல்லை. என்னைப் பொறுத்த வரை அதுவே கவலையளிக்கும் விஷயமாகும். சஹால் விஷயத்தில் அவர்கள் என்ன செய்தனர்? சஹால் சிறந்த பவுலராக செயல்பட்டும் தக்க வைக்கப்படவில்லை. அவர் இந்த விளையாட்டின் ஒரு லெஜெண்ட். அவர்களிடம் ஹஸரங்காவும் இருந்தார். அவரையும் பெங்களூரு கழற்றி விட்டது”

- Advertisement -

“இது போன்ற பெரிய வீரர்களை விடுவித்து விட்டு வெற்றி உங்களால் பெற முடியாது. சிராஜை தவிர்த்து போட்டியை வென்று கொடுக்கக்கூடிய பவுலர்கள் அவர்களிடம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சிராஜூம் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். கொல்கத்தாவுக்கு எதிராக கரண் சர்மாவையும் அவர்கள் பெஞ்சில் அமர வைத்தனர். அவர்கள் எப்போதும் வீரர்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை”

இதையும் படிங்க: ஆர்.சி.பி அணியின் தோல்விக்கு விராட் கோலியும் ஒரு காரணமா? நேற்றையை போட்டியில் – இந்த சிக்கலை கவனிச்சீங்களா?

“சிவம் துபேவிடம் இருந்து ஆர்சிபி அணியால் சிறந்த செயல்பாடுகளை கொண்டு வர முடியவில்லை. ஆனால் தற்போது சிஎஸ்கே அணிக்கு போட்டிகளை வென்று கொடுக்கும் சிவம் துபே 2023 கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய நட்சத்திரம். ஆர்சிபி அணியில் துபே அசத்தவில்லை. உண்மையில் சிஎஸ்கே அணியில் வீரர்களுக்கு ஆதரவு கொடுக்கப்படுகிறது. ஆனால் ஆர்சிபி அணியில் நிலைமை வேறு மாதிரி உள்ளது. துபேவை நீங்கள் 5 அல்லது 6வது இடத்தில் களமிறக்கினால் அவர் அசத்த மாட்டார்” என்று கூறினார்.

Advertisement