ஆர்.சி.பி அணியின் தோல்விக்கு விராட் கோலியும் ஒரு காரணமா? நேற்றையை போட்டியில் – இந்த சிக்கலை கவனிச்சீங்களா?

Kohli
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் விளையாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது தோல்வியை தழுவி கடந்த 9 ஆண்டுகளாக சொந்த மண்ணில் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றிபெற முடியாத மோசமான சூழலை சந்தித்துள்ளது.

அந்த வகையில் நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 83 ரன்களையும், கேமரூன் கிரீன் 33 ரன்களையும், மேக்ஸ்வெல் 28 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 20 ரன்களையும் குவித்தனர். பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 16.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களையும், சுனில் நரேன் 47 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூரு அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் பார்க்கப்பட்டாலும் துவக்க வீரரான கோலி பொறுமையாக விளையாடியதும் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் சின்னசாமி போன்ற சிறிய மைதானத்தில் 50 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளும் ஒரு பேட்ஸ்மேன் செஞ்சுரி அடிக்க நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தும் 59 பந்துகளை சந்தித்து வெறும் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 83 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க : வேற வழியே இல்லை.. ஆர்சிபி ஜெய்க்கனும்ன்னா அந்த 2 வெளிநாட்டு பவுலர்களை கொண்டு வரனும்.. டாம் மூடி

ஒருவேளை அவர் அதிரடி காட்டியிருந்தால் பெங்களூரு அணி 210 ரன்களை கூட கடந்திருக்கும். எனவே அதிக பந்துகளை சந்தித்து செட்டான பேட்ஸ்மேனாக இருந்தும் விராட் கோலி அதிரடி காட்ட தவறியதே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement