அடிச்சி சொல்றேன். இவர் வர ஏலத்துல 16 கோடிக்கு மேல ஏலம் போவாரு – ராபின் உத்தப்பா உறுதி

Uthappa-1
Advertisement

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-வது ஐபிஎல் தொடரானது துவங்க உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் நகரங்களை தலைமையாகக் கொண்ட புதிய இரண்டு அணிகளும் சேர்த்து மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடரானது மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட வேண்டும் என்றும் மற்ற வீரர்கள் அனைவரும் மெகா ஏலத்தில் விடப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Ipl cup

அதன்படி ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் அணிகள் அனைத்தும் தங்கள் அணியில் தக்கவைக்கும் 4 வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதில் பல வீரர்களுக்கு எதிர்பார்க்காத வாய்ப்பும், சில வீரர்களுக்கு ஏமாற்றமும் நிகழ்ந்துள்ளது.

- Advertisement -

அதோடு இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சில வீரர்கள் தங்கள் அணியால் தக்க வைக்கப்பட நினைத்தும் தாங்களாக முன்வந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் 16 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போவார் என்று சிஎஸ்கே அணியின் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார். குறித்து அவர் கூறுகையில் :

Rashid

டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலரான ரஷீத் கான் என்னை பொருத்தவரை நிச்சயம் இந்த ஐபிஎல் ஏலத்தில் 16 கோடி ரூபாய்க்கு மேல் செல்வார். ஏனெனில் அவரை ஏலத்தில் எடுக்க நிறைய அணிகள் போட்டி போடுவது மட்டுமின்றி அவருக்கான ஏல மதிப்பும் எகிறும் என்பதனால் நிச்சயம் அவருக்கான மதிப்பு 16 கோடிக்கு மேல் செல்லும் என்றும் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : நாளைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்கப்போவது இவர்தானாம் – அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

சன் ரைசர்ஸ் அணி சார்பாக கேப்டன் வில்லியம்சன் 14 கோடி ரூபாய்க்கும், இளம் வீரர்களான அப்துல் சமாத் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் 4 கோடி ரூபாய்க்கும் தக்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சன் ரைசர்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்த ரஷீத் கான் 9 ரூபாய்க்கு தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் 16 கோடி ரூபாய் வரை எதிர்பார்ப்பதால் தானாக முன்வந்து சன் ரைசர்ஸ் அணியில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement