நாளைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்கப்போவது இவர்தானாம் – அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

Bharat
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி டிராவில் முடிவடைய அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 3ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி மீண்டும் இணைவதால் எந்த வீரர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

rachin 1

ஏற்கனவே வெளியான தகவலின் படி ரஹானே வெளியேற்றப்பட்டு விராட் கோலி களமிறங்குவார் என்று கூறப்பட்டு வரும் வேளையில் ரஹானே அணியில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக துவக்க வீரர் மாயங்க் அகர்வால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக கோலி அணியில் விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் அகர்வால் வெளியேற்றப்படும் பட்சத்தில் ஓபனராக யார் விளையாடுவார் என்று பார்க்கும் வேளையில் கடந்த போட்டியின் போது கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட சகாவிற்க பதிலாக அறிமுக வீரராக அடுத்த போட்டியில் கே.எஸ்.பரத் வாய்ப்பை பெறுவது மட்டுமின்றி துவக்க வீரராகவும் விளையாடுவார் என்று தெரிய வந்துள்ளது.

bharat 1

இதன் காரணமாக சுப்மன் கில் மற்றும் பரத் ஆகியோர் தொடக்க வீரர்களாக விளையாடும் பட்சத்தில் அடுத்தடுத்து புஜாரா, கோலி, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மிடில் ஆர்டரில் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அகர்வாலுக்கு பதிலாக நாளைய போட்டியில் துவக்க வீரராக கே.எஸ்.பரத் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எது நடக்கலானாலும், இது கண்டிப்பா நடக்கும். இந்திய அணியில் உள்ள மாற்றம் குறித்து பேசிய – விராட் கோலி

நாளைய போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ : 1) சுப்மன் கில், 2) கே.எஸ்.பரத், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) ரஹானே, 7) ஜடேஜா, 8) அஷ்வின், 9) இஷாந்த் சர்மா, 10) உமேஷ் யாதவ், 11) சிராஜ்

Advertisement