எது நடக்கலானாலும், இது கண்டிப்பா நடக்கும். இந்திய அணியில் உள்ள மாற்றம் குறித்து பேசிய – விராட் கோலி

Kohli-2 Press
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மும்பை மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்கிற காரணத்தினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாக இந்திய அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாளைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்பதில் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

Light

- Advertisement -

ஏனெனில் முதல் நாள் பாதி நேரம் வரை மழை பெய்யும் என்கிற காரணத்தினால் நிச்சயம் நாளைய போட்டி நடைபெற தடைபெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மேலும் அடுத்த 4 நாட்களில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்பதால் போட்டி எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இருப்பினும் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். அதேவேளையில் மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருக்கும் என்பதனால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மைதானத்தின் தன்மையை வைத்து இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறியிருந்த நிலையில் ஒரு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி மைதானத்தின் தன்மையை கணக்கில் வைத்து மூன்று ஸ்பின்னர்கள் இன்றி 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்துவீச்சாளகளுடன் விளையாடும் என்று தெரிவித்துள்ளார். மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக சிராஜ் அணியில் சேர்க்கப்படுவார் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

siraj

ஏனெனில் பௌலிங் காம்பினேஷனில் இந்த மைதானத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்க திட்டம் இருப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அக்சர் படேல் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக விளையாட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் பார்ம் இன்றி தவிக்கும் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரும் இந்த போட்டியில் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அடுத்து வரும் தென்னாப்பிரிக்க தொடருக்காக அவர்கள் இருவரும் அனுபவ வீரர்களாக விளையாடுவார்கள் என்பதன் காரணமாக இந்த போட்டியிலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலிக்கு இடமும் கிடைத்தது. ரஹானே வெளியேறவும் தேவையில்லை – இந்திய அணி போட்டுள்ள பக்கா பிளான்

இந்திய அணியில் வேறு எந்த மாற்றங்கள் நிகழவில்லை என்றாலும் நிச்சயம் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்கள் மாற்றம் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. தற்போது மும்பையில் பெய்து வரும் மழை காரணமாக போட்டி எந்த அளவு பாதிக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாத விடயமாக இருந்தாலும் முக்கிய மாற்றமாக மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரின் சேர்க்கை இருக்கும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement