விராட் கோலிக்கு இடமும் கிடைத்தது. ரஹானே வெளியேறவும் தேவையில்லை – இந்திய அணி போட்டுள்ள பக்கா பிளான்

Rahane
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு கிட்டத்தட்ட அருகில் சென்று இறுதியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் கடைசி நாளில் ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜாஸ் பட்டேல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்த முடியாமல் நூலிழையில் வெற்றியை தவற விட்டது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் தேர்வு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

ind

- Advertisement -

ஏனெனில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருந்த விராத் கோலி அணிக்கு திரும்புவதால் எந்த வீரரை வெளியேற்றுவது ? என்ற கேள்வியே அதிகளவு இருந்தது. ஏனெனில் விராட் கோலி அணிக்கு திரும்பும்பட்சத்தில் ரஹானே வெளியேறுவார் என்று கூறப்பட்டது. அதேவேளையில் கடந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்ஸ்களிலும் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயரை வெளியேற்ற முடியாது. மேலும் அனுபவ வீரரான புஜாரா அணியை வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

அதன் காரணமாக இந்திய அணியில் இருந்து யாருக்கு பதிலாக கோலி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணி ஒரு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டியில் கழுத்து வலி காரணமாக விக்கெட் கீப்பிங் செய்யாமல் பேட்டிங் மட்டுமே செய்து வந்த சாஹாவை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக கே.எஸ்.பரத்தை அணிக்குள் கொண்டு வர இருக்கின்றனர்.

Bharat

அதோடு மட்டுமில்லாமல் மாயங்க் அகர்வால் முதலாவது போட்டியில் மோசமாக விளையாடியதன் காரணமாக அவரை அணியில் இருந்து வெளியேற்றி அவருக்கு பதிலாக பரத்தை துவக்க வீரராக களம் இறக்கி விட்டு பின்னர் மிடில் ஆர்டரில் கோலி, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரையும் ஆட வைத்து விட்டால் பிரச்சனை முடிந்துவிடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsNZ : நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – என்ன தெரியுமா ?

அப்படி பரத் துவக்க வீரராக களமிறங்கும் பட்சத்தில் ரகானே, புஜாரா, கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் என மிடில் ஆடர் பலமாக அமையும் என்பதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக நாளைய போட்டியில் நிச்சயம் அகர்வால் வெளியேற்றப்பட்டு பரத் அறிமுக வீரராக விளையாடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement