INDvsNZ : நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – என்ன தெரியுமா ?

indvsnz
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இரு அணிகளும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ind

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின்போது ஓய்வில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி இரண்டாவது டெஸ்டில் அணியில் இணைய இருப்பதால் மேலும் இந்த போட்டி கூடுதல் சுவாரஸ்யம் பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா ? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி போட்டி துவங்கவுள்ள நிலையில் நேற்று இந்திய அணியின் பயிற்சிகள் அனைத்தும் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இன்றும் அங்கு மழை விட்டு இது பெய்து வருகிறது. மேலும் நாளை போட்டியின் முதல் நாள் அன்று 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

rain 1

அதுமட்டுமின்றி போட்டி நடைபெறும் நாட்களில் இரண்டு மற்றும் மூன்றாவது நாட்களில் ஓரளவுக்கு மழை இருக்கும் என்றும் கடைசி 2 நாட்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : கே.எல் ராகுலை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து விலகிய மற்றொரு பிரபலம் – மேலும் பின்னடைவு

மேலும் மழையின் காரணமாக போட்டி இடையிடையே பாதிக்கப்படும் வேளையில் இந்த போட்டியும் டிராவில் முடிவடைய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்டு வருவதால் இரு அணிகளுக்குமே இது ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement