கே.எல் ராகுலை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து விலகிய மற்றொரு பிரபலம் – மேலும் பின்னடைவு

pbks
Advertisement

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் கே.எல் ராகுல் கடந்த 2 சீசன்களாக கேப்டனாகவும் இருந்து வருகிறார். அவரது தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அதிகமாக தோல்வியை தழுவியது. அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு சீசன்களில் பஞ்சாப் அணியில் எதிர்பார்த்த முன்னணி வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ராகுல் மற்றும் அகர்வால் மட்டுமே அணியின் முக்கால்வாசி ரன்களை குவித்து இருந்தனர்.

pbks

இதன் காரணமாக விரக்தி அடைந்த கே.எல்.ராகுல் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறி தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் புதிதாக இணைய இருக்கும் லக்னோ அணிக்காக விளையாட இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான அணியின் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலிலும் பஞ்சாப் அணியில் ராகுலின் பெயர் இடம்பெறவில்லை. அந்த அணியில் மாயங்க் அகர்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவர் மட்டுமே ரீடெயின் செய்யப்பட்டனர்.

- Advertisement -

இதன் காரணமாக பஞ்சாப் அணிக்கு ராகுல் இல்லாததால் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் பஞ்சாப் அணி ஒரு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆன்டி பிளவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துணை பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் தான் அடுத்து வரும் சீசனில் பஞ்சாப் அணியின் துணை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் விலகலுக்கு காரணம் யாதெனில் :

Andy-Flower

அடுத்த ஐபிஎல் தொடரில் புதிதாக இணையவிருக்கும் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் புதிய பயிற்சியாளருக்கான தேடலில் ஈடுபட்டு வருவதால் அந்த இரு அணிகளில் ஒன்றில் பயிற்சியாளராக முடிவு எடுத்ததன் காரணமாகவே தற்போது பஞ்சாப் அணியில் இருந்து ஆன்டி பிளவர் வெளியேறியுள்ளார். அவரது இந்த விலகல் நிச்சயம் பஞ்சாப் அணிக்கு ஒரு பின்னடைவு என்றே கூறலாம். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த ஆன்டி பிளவர் அவர் ஏற்கனவே பல அணிகளுக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் சாஹா விளாயாடுவாரா? மாட்டாரரா? – வெளியான தகவல்

அவரது இந்த விலகல் பஞ்சாப் அணி வீரர்களை மனதளவில் பாதிக்கும். இருப்பினும் இந்த ஆண்டு எப்படியாவது பஞ்சாப் அணியை வலுப்படுத்த வேண்டும் என்கிற காரணத்தினால் இரண்டு வீரர்களை மட்டும் தக்க வைத்த பஞ்சாப் அணி தங்கள் கைவசம் 70 கோடி ரூபாய்க்கும் மேல் வைத்துள்ளது. எனவே நிச்சயம் மெகா ஏலத்தில் சிறப்பான பல வீரர்களை சரியாக தட்டி தூக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement