இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் சாஹா விளாயாடுவாரா? மாட்டாரரா? – வெளியான தகவல்

Saha-1
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் ஏற்பட்ட கழுத்து வலி காரணமாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் விக்கெட் கீப்பர் சாஹா கீப்பிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பரான கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பிங் செய்தார். இதன் காரணமாக அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா ? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் உள்ளது. கடுமையான கழுத்து வலி இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வந்த சாஹா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

saha

அவரது சிறப்பான இன்னிங்ஸ் காரணமாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதன் காரணமாகவே இந்திய அணி வெற்றி வரை நெருங்கியது என்றே கூறலாம். இந்நிலையில் சாஹாவின் காயம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் கூறுகையில் : நாங்கள் சாஹாவின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதன்படி அணியின் பிசியோதெரபிஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் அவ்வப்போது சாஹாவின் உடல்நிலை குறித்து தகவல் அளித்து வருகின்றனர்.

- Advertisement -

தற்போது வரை அவர் இன்னும் முழுமையாக வலியில் இருந்து மீளவில்லை. இருப்பினும் அவர் முதல் போட்டியின்போது சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா ? மாட்டாரா ? என்பது குறித்து இப்போது எந்த விவரத்தையும் கூற முடியாது. போட்டி துவங்கும் முன்னரே அவரது இடம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கும் இது ஒரு நெருக்கமான முடிவாகத் தான் என்றும் கூறியுள்ளார்.

bharat

இதனால் போட்டி துவங்குவதற்கு முன்னரே அவர் விளையாடுவாரா ? மாட்டாரா ? என்பது தெரியும். தற்போது அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் : முதல் டெஸ்ட் போட்டியில் அவரிடமிருந்து நல்ல பாசிட்டிவான ஆட்டத்தை நாம் பார்த்தோம். பேட்டிங் செய்ய மைதானம் இலகுவாக இல்லாவிட்டாலும் அவர் இரண்டாவது இன்னிங்சில் தனது பொறுப்பை உணர்ந்து ஆட்டமிழக்காமல் அரை சதம் அடித்து அசத்தினார் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் : நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் குறித்தும் நிறைய பேச்சுக்கள் இருந்து வருகிறது. ஆனால் அவர்கள் இருவருமே அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் அவர்கள் விளையாடியுள்ளனர். நிச்சயம் அவர்கள் மீண்டும் பார்முக்கு திரும்புவார்கள் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement