இரண்டாவது டெஸ்ட் : நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்த நிலையில் நாளை டிசம்பர் 3ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான அணியில் கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்புவதால் எந்த வீரர் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.

ind

- Advertisement -

இந்நிலையில் முதல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக விராட் கோலி விளையாடுவார் என்று தெரிகிறது. அதேபோன்று முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்த போட்டியிலும் தொடர்வார் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் விளையாடும் வீரர்களின் பிளேயிங் லெவன் உத்தேச பட்டியல் இதோ :

IND

1) சுப்மன் கில், 2) மாயங்க் அகர்வால், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சாஹா / கே.எஸ்.பரத் 7) ரவீந்திர ஜடேஜா, 8) அஷ்வின், 9) அக்சர் படேல், 10) இஷாந்த் சர்மா, 11) உமேஷ் யாதவ்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் மெகா ஏலத்தில் சி.எஸ்.கே அணி எடுக்கப்போகும் முதல் வீரர் இவர்தான் – ராபின் உத்தப்பா பேட்டி

இந்த பிளேயிங் லெவனில் ரஹானேவின் இடம் தான் அதிகளவு சிக்கலை சந்தித்துள்ளது. இது உத்தேசமாக கணிக்கப்பட்ட அணிதான். எனவே ரஹானே இடப்பெறுவாரா ? மாட்டாரா ? என்பது நாளை காலை தான் தெரியும். நாளைய போட்டியில் ரஹானே விளையாடலாமா ? வேண்டாமா ? இதுகுறித்த உங்களது கருத்துக்களை பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement