தோனியை அப்படி கூப்பிட ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. அவரும் வேணான்னு சொல்லிட்டாரு – ராபின் உத்தப்பா பேட்டி

Uthappa
- Advertisement -

இந்திய அணிக்காக 46 ஒருநாள் போட்டிகள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அதிரடி துவக்க ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா தனது கிரிக்கெட் கேரியரின் ஆரம்ப காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டாலும் அதன்பிறகு பார்ம் அவுட் காரணமாக பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். ஆனால் அவரது திறமைக்கு முற்றிலும் வரவேற்பு கிடைத்த இடமாக ஐபிஎல் தொடர் மாறியது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ராபின் உத்தப்பா இதுவரை 196 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Uthappa-2

- Advertisement -

அவரது கேரியரின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக இந்திய அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்த்த வேளையில் சில போட்டியிலேயே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 2020ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படி அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அவருக்கு சி.எஸ்.கே அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி அவர் கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார் என்று கூறலாம். மேலும் இந்த ஆண்டு துவக்க வீரராக செயல்பட்டு வரும் அவர் தற்போது தோனி உடனான தனது நட்பு குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து தமிழக வீரரான அஷ்வினுடன் பேசிய உத்தப்பா கூறுகையில் : 2020 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இணைந்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தோனியை இப்போது மஹி பாய் என்று அழைப்பது மிகவும் கடினமாக உள்ளது.

Uthappa

இதுவரையில் நான் அவரை மஹி, எம்.எஸ் என்று தான் அழைத்து வருகிறேன். 2008ஆம் ஆண்டுக்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட நான் 12-13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் தோனியின் தலைமையில் விளையாடுகிறேன். இது ஒரு மகிழ்ச்சியான விடயம் தான். மேலும் ஒருமுறை தோனியிடம் தயக்கத்துடனே ஒரு விஷயத்தை கேட்டேன். நான் உங்களை எவ்வாறு அழைக்க வேண்டும் நண்பா? எல்லோரும் உங்களை மஹி பாய் என்று அழைப்பதால் நானும் உங்களை அப்படித்தான் கூப்பிட வேண்டுமா? என்று கேட்டேன்.

- Advertisement -

ஆனால் தோனி அதெல்லாம் தேவையில்லை. நீ எப்படி கூப்பிட வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி அழைக்கலாம். நீ என்னை எம்எஸ் என்றோ அல்லது உனக்கு பிடித்தவாறோ அப்படி கூப்பிடலாம் என்று தோனி கூறினார். அவ்வளவு எளிமையானவர் தோனி. அவரை ஏன் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு என்று ராபின் உத்தப்பா கூறினார்.

இதையும் படிங்க : காட்டடி அடித்த பேட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் படைத்த இமாலய சாதனை – வியக்க வைக்கும் தகவல் இதோ

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தோனி மிகவும் குறைவாகப் பேசுவார். ஆனால் அவர் பேசும் போதெல்லாம் அனைவரும் அவர் சொல்வதை கவனமாக கேட்போம். சில நேரங்களில் அவர் காமெடியாகவும் பேசுவார். இந்திய அணியின் கேப்டனாக வருவதற்கு முன்பே தனித்துவமாக அவர் செயல்பட்டார் என தோனி உடனான உறவு குறித்து ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement