காட்டடி அடித்த பேட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் படைத்த இமாலய சாதனை – வியக்க வைக்கும் தகவல் இதோ

- Advertisement -

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 6-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 14-ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா மோதின. புனேவில் நிகழ்ந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய மும்பைக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா வெறும் 3 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்க 19 வயது இளம் வீரர் டேவால்ட் ப்ரேவிஸ் வெறும் 19 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 29 ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த சமயத்தில் மறுபுறம் தடுமாற்றமாக விளையாடிக்கொண்டிருந்த இஷான் கிசான் 14 (21) ரன்களில் நடையை கட்ட 11 ஓவர்களில் 55/3 என திணறிய மும்பை ஆரம்பத்திலேயே பின்னடைவைச் சந்தித்தது. அந்த நிலையில் காயத்திலிருந்து குணமடைந்து வந்த நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக பேட்டிங் செய்து மும்பையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

மும்பை 161/4 ரன்கள் சேர்ப்பு:
அவருக்கு உறுதுணையாக இளம் வீரர் திலக் வர்மாவும் அதிரடியாக பவுண்டரிகளை விளாச மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 52 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார். அந்த நிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கைரன் பொல்லார்ட் ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரில் வெறும் 5 பந்துகளை மட்டுமே சந்தித்தாலும் 3 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு 22* ரன்களை எடுத்து வெறித்தனமான பினிஷிங் கொடுத்தார்.

Suryakumar Yadhav MI vs KKR

அவருடன் பேட்டிங் செய்த திலக் வர்மா 27 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 38* ரன்களை விளாசியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161/4 என்ற நல்ல ஸ்கோரை மும்பை எட்டியது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

சரிந்த கொல்கத்தா, தூக்கி நிறுத்திய கமின்ஸ்:
அதை தொடர்ந்து 162 என்ற நல்ல இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர் அஜிங்கியா ரஹானே 7 (11) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 10 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாட முயன்ற சாம் பில்லிங்ஸ் 17 (12) ரன்களில் அவுட்டாக அவரைத் தொடர்ந்து வந்த நிதிஷ் ராணா 8 (7) ரன்களில் அவுட்டானதால் 83/4 என தடுமாறிய கொல்கத்தாவின் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரசல் கொல்கத்தாவை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் அவரும் 11 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

MI vs KKR Murugan Ashwin

இதனால் 101/5 என திண்டாடிய கொல்கத்தாவை வெங்கடேஷ் ஐயர் எப்படியாவது வெற்றி பெற வைப்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் யாருமே எதிர்பாராத வண்ணம் விஸ்வரூபம் எடுத்தார். அவர் களமிறங்கிய போது கொல்கத்தாவின் வெற்றிக்கு 42 பந்துகளில் 61 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட தொடங்கிய அவர் மும்பைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

- Advertisement -

தொடர்ந்து பட்டையைக் கிளப்பிய அவர் வெறும் 15 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்து 56* ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 50* ரன்கள் விளாசினார். இதனால் 16 ஓவர்களிலேயே 162/5 ரன்களை எடுத்த கொல்கத்தா 4 ஓவர்களை மீதம் வைத்து ஸ்டைலாக மாஸ் வெற்றி பெற்றது.

பட் கமின்ஸ் வேற லெவல் சாதனை:
இந்த போட்டியில் ஒரு வேகப்பந்து வீச்சாளரான பட் கம்மின்ஸ் யாருமே எதிர்பாராத வண்ணம் அதிரடி சரவெடியாக மும்பையை புரட்டி எடுத்து அரைசதம் அடித்து தனி ஒருவனை போல கொல்கத்தாவை வெற்றி பெறச் செய்ததை பார்த்த பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். அதிலும் குறிப்பாக 16-வது ஓவரின்போது வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ் வீச அதை எதிர்கொண்ட கமின்ஸ் 6, 4, 6, 6, 3(நோ பால்), 4, 6 என 35 ரன்களை ஒரே ஓவரில் விளாசி வானவேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த மாஸ் வெற்றியால் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ள கொல்கத்தா புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் வெறும் 14 பந்துகளில் 50 ரன்களை தொட்ட பட் கமின்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியாவின் கேஎல் ராகுலுடன் பகிர்ந்து கொண்டார். இதற்குமுன் கடந்த 2018-ஆம் ஆண்டு டெல்லிக்கு எதிரான போட்டியில் இதேபோல் 14 பந்துகளில் 50 ரன்களைக் கடந்து சாதனை படைத்திருந்த ராகுலுக்கு நிகராக இப்போது ஒரு பவுலரான கமின்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியல் இதோ:
1. பட் கமின்ஸ் (கொல்கத்தா) : 14 பந்துகள், மும்பைக்கு எதிராக, 2022*
2. கேஎல் ராகுல் (பஞ்சாப்) : 14 பந்துகள், டெல்லிக்கு எதிராக, 2018.
3. யூசுப் பதான் (கொல்கத்தா) : 15 பந்துகள், ஹைதெராபாத்க்கு எதிராக, 2014.
4. சுனில் நரேன் (கொல்கத்தா) : 15 பந்துகள், பெங்களூருவுக்கு எதிராக, 2017.

இதையும் படிங்க : கொல்கத்தாவை காப்பாற்றிய குலசாமி! ரசிகர்களை வாய் பிளக்க வைத்து மும்பையை கதறவிட்ட ஆஸ்திரேலிய வீரர்

இத்துடன் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தது 15 பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் பதிவு செய்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. பட் கமின்ஸ் : 56* (15) – 373.33, மும்பைக்கு எதிராக, 2022*
2. சுரேஷ் ரெய்னா : 87 (25) – 348.00, பஞ்சாப்க்கு எதிராக, 2014
3. யூசுப் பதான் : 327.27, ஹைதெராபாத்க்கு எதிராக, 2014.

Advertisement