ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. கடந்த மார்ச் 22ஆம் தேதி துவங்கிய அத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகள் போட்டியிட்டன. அதில் சிஎஸ்கே, ராஜஸ்தான், ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த தோல்விகளால் ஆரம்பத்திலேயே லீக் சுற்றுடன் வெளியேறின. அதே போல நடப்பு சாம்பியன் கொல்கத்தா, டெல்லி, லக்னோ முக்கிய நேரத்தில் சொதப்பி பிளே ஆஃப் சுற்றை கோட்டை விட்டன.
மறுபுறம் பஞ்சாப், குஜராத், ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் சிறப்பாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த 4 அணிகளில் பிளே ஆஃப் சுற்றில் விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக எலிமினேட்டரில் வென்று ஃபைனலுக்கு சென்று 6வது கோப்பையை முத்தமிடுமா என்ற எதிர்பார்ப்பு பல்தான்ஸ் ரசிகர்களிடம் உள்ளது.
ஃபைனல் அணிகள்:
இந்நிலையில் இந்த வருடம் ஆரம்பம் முதலே பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மட்டுமே தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருவதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். எனவே மும்பை மற்றும் குஜராத்தை கண்டுகொள்ளாத அவர் பஞ்சாப் – பெங்களூரு அணிகள் ஃபைனல் செல்லும் என்று கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் உங்களுக்கு சரியான நேரத்தில் வேகம் தேவை. பஞ்சாப் தொடரை மிகவும் சிறப்பாக துவங்கியது. இடையே கொஞ்சம் நெருப்பை விட்டாலும் லீக் சுற்றின் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக வேகத்தைப் பெற்றுள்ளது. சில பஞ்சாப் வீரர்கள் நாட்டுக்காக விளையாடச் சென்றனர். அதையும் தாண்டி அவர்களுடைய பேட்டிங் வரிசை திடமாகவே இருக்கிறது”
உத்தப்பா கணிப்பு:
“அர்ஷ்தீப் இன்னும் நெருப்பாக பவுலிங் செய்யவில்லை. அப்படியானால் அவருடைய பெரிய செயல்பாடு முக்கியமான போட்டியில் வரக்கூடும். இம்முறை இறுதிப்போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் என்று நான் வலுவாக கருதுகிறேன். கொல்கத்தாவில் அதிகம் பாராட்டப்படாத ஸ்ரேயாஸ் எப்போதுமே சிறந்த கேப்டன். வரலாற்றில் அதிகம் சாதிக்காத பஞ்சாப் போன்ற அணியை சிறப்பாக வழி நடத்துவது அவருடைய லீடர்ஷிப் மற்றும் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது”
இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் செய்ததை மறக்க முடியாது.. சீக்கிரம் வருவேன்.. சென்னைக்கு ப்ரேவிஸ் நன்றி
“அதே போல பெங்களூருவும் நன்றாக பவுலிங் செய்து தொடரைத் துவக்கினர். இருப்பினும் அவர்கள் சில போட்டிகளை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் அதற்கு விராட் கோலி 20 ஓவர்கள் பேட்டிங் செய்ய வேண்டும். ஹேசல்வுட் மீண்டும் வந்துள்ளது புவனேஸ்வருக்கு உதவும். யாஷ் தயாள் டெத் ஓவரில் ஓரளவு அசத்துகிறார். கொஞ்சம் தடுமாறும் சூயஸ் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டால் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். க்ருனால் பாண்டியாவும் நன்றாக பவுலிங் செய்கிறார்” என்று கூறினார்.



