ஆவேஷ் கான் வேணாம். இந்த 5 வேகப்பந்து வீச்சாளரை டி20 உ.கோ டீம்ல எடுங்க – ராபின் உத்தப்பா கோரிக்கை

Uthappa-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள வேளையில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் வீரர்கள் செயல்பாடு எவ்வாறு அமைகிறதோ அதனைப் பொறுத்தே அணி தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Bhuvneswar Kumar INDIA

- Advertisement -

இவ்வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் பெரிய அளவில் இந்திய அணி பந்து வீச்சில் சோபிக்கவில்லை. இதன் காரணமாக நிச்சயம் பந்துவீச்சு யூனிட்டில் பெரிய மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆசிய கோப்பை தொடரில் ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஸ்வர் குமார் என மூன்று வேகப்பந்து வீச்சாளருடன் மட்டுமே இந்திய அணி சென்றது பெரிய விமர்சனத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் டி20 உலக கோப்பையில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல வேண்டும் என சிஎஸ்கே அணியின் வீரரான ராபின் உத்தப்பா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

IND vs ENG Jasprit Bumrah

மேலும் அவர் ஆவேஷ் கானை அணியில் சேர்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் நிச்சயம் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் உடன் உலகக்கோப்பை தொடருக்காக பயணிக்க வேண்டும். காயம் காரணமாக அணியை விட்டு வெளியில் இருக்கும் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் அணிக்கு திரும்புவது நல்லது.

- Advertisement -

அதோடு அவர்களுடன் புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இருக்க வேண்டும். இந்திய அணியின் ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாகருடன் செல்லலாம். நிச்சயம் இவர்கள் ஐந்து பேர் கொண்ட யூனிட்டில் ஹர்திக் பாண்டியா ஆறாவதாக இணைந்தால் அது அணிக்கு பலம்.

இதையும் படிங்க : ஒருவழியா பிரச்சனை ஓவர். இந்த ஒரு விஷயத்தால கோலி 5 கிலோ கம்மியாகி இருப்பாரு – ரவி சாஸ்திரி பேட்டி

ஆவேஷ் கானை பொறுத்தவரை சமீபத்திய ஃபார்ம் சரியில்லை என்பதால் அவரை சேர்க்க வேண்டாம் என்பதை தன்னுடைய கருத்து என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உலகக்கோப்பை அணியை அறிவிக்கவேண்டும் என ஐ.சி.சி கெடு விதித்துள்ளதால் விரைவில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement