ஒருவழியா பிரச்சனை ஓவர். இந்த ஒரு விஷயத்தால கோலி 5 கிலோ கம்மியாகி இருப்பாரு – ரவி சாஸ்திரி பேட்டி

Shastri
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் தனது மிகச்சிறந்த செயல்பாடுகளால் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்து கடந்த 10 வருடங்களாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் விளாசி நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக உருவெடுத்தார். பொதுவாகவே சூப்பர் ஸ்டார் வீரர்கள் எப்போதும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்க்கும் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவர்கள் சுமாராக செயல்படும்போது கொண்டாடுவதற்கு ஈடாக விமர்சிப்பது வழக்கமாகும். அதற்கு விதிவிலக்காகாமல் உச்சத்தை நோக்கி மட்டுமே சென்று கொண்டிருந்த விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக உலக அளவில் தினம்தோறும் விமர்சனங்களை சந்தித்தார்.

அதிலிருந்து விடுபடுவதற்காக கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடத் தொடங்கிய அவர் 2019க்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு இடையிடையே 50, 70 போன்ற நல்ல ரன்களை அடித்து பார்முக்கு திரும்ப போராடினார். ஆனாலும் ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு களமிறங்கினாலே சதமடிப்பார் என எதிர்பார்க்கும் அளவுக்கு தங்கமான தரத்தை உருவாக்கி வைத்துள்ள அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய முன்னாள் இந்திய வீரர்கள் பகலானால் இரவு வரும் என்பதை மறந்து அணியிலிருந்து நீக்குமாறு கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

நிம்மதி சதம்:
ஆனால் அவரது அருமையை உணர்ந்த ரிக்கி பாண்டிங் போன்ற வெளிநாட்டு வீரர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்தனர். அவை அனைத்தையும் காதில் வாங்கி வைத்துக் கொண்டு தொடர்ந்து கடுமையான பயிற்சிகளுடன் விடாமுயற்சி செய்து வந்த விராட் கோலி ஒருவழியாக 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1020 நாட்கள் கழித்து சதமடித்து தினம்தோறும் தன்மீது அம்பாக வந்த விமர்சனங்களை அடித்து நொறுக்கினார்.

Virat Kohli

மேலும் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்த அவர் 3 வருடங்களாக அருகில் வராமல் அடம்பிடித்த 71வது சதத்தை விளாசி நிம்மதியடைந்தார். பொதுவாகவே தன்னுடைய சதங்களை ஆக்ரோஷமாக கொண்டாடும் விராட் கோலி 3 வருடங்களாக சந்தித்த விமர்சனங்களுக்கும் பதிலடியாக அடித்த இந்த சதத்தை வெறித்தனமாக கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியே நேர்மாறாக அதுவரை பார்க்காத சிரித்த முகத்துடன் கொண்டாடிய அவர் தன்னை விமர்சித்த அதே முன்னாள் வீரர்களை கைதட்டி பாராட்ட வைத்துள்ளார்.

- Advertisement -

5 கிலோ பாரம்:
அதிலிருந்து பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை விட தன்னை முடிந்து போன்றவர் என்று பேசியவர்களது கருத்துக்களை பொய்யாக்கிய மகிழ்ச்சியே அவருடைய முகத்தில் தெரிந்தது என்றே கூறலாம். இந்நிலையில் 71வது சதத்தை அடித்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள விராட் கோலி தற்போது தன்னுடைய உடலில் 5 கிலோ பாரம் குறைந்ததை போல் உணர்வார் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 2017 முதல் அவருடன் பயிற்சியாளராக பணியாற்றிய இவர் இது பற்றிய சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

VIrat Kohli IND vs HK

“நீங்கள் 1020 நாட்கள் என்று சொன்னீர்கள். அதில் 700 நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அது அதிகப்படியான நாட்கள். நீங்கள் அற்புதமாக விளையாடி 70 சதங்களை அடித்து விட்டு இரண்டரை வருடங்கள் மோசமான நிலையில் திண்டாடினால் அனைவரும் அதை நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அவரும் மனிதன் தான். இந்த விமர்சனங்கள் அவரை தின்றிருக்கும். ஒவ்வொரு நாள் காலையில் எழுந்த பிறகு அவர் அதை தொடர்ச்சியாக நினைத்துக் கொண்டிருந்திருப்பார்”

- Advertisement -

“அதனால் இன்று அவர் 5 கிலோ குறைந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். அது உடலைச் சார்ந்த எடையாக இல்லாமல் இருந்தாலும் குறைந்தபட்சம் தலையில் இருந்த எடையாக இருக்கும். அந்த இன்னிங்சில் கடைசி 40 ரன்களை பார்த்த உங்களுக்கு பழைய விராட் கோலி வந்தது தெரிந்திருக்கும். அவருடைய ட்ரேட்மார்க் ஷாட், தன்னம்பிக்கை உட்பட அனைத்தும் திரும்ப வந்து விட்டது. அது வருவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொண்டது” என்று கூறினார்.

இதையும் படிங்க : சொன்னா கேளுங்க. டி20 உலககோப்பை அணியில் இவரையும் சேருங்க. அதுதான் நல்லது – கவாஸ்கர் ஓபன்டாக்

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனைப் படைத்துள்ள விராட் கோலி இந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 முறை கோல்டன் டக் அவுட்டான போது ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு உடலிலும் உள்ளத்திலும் தெரிந்தது. அதனால் சில மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் ஃபார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த விராட் கோலி கடைசி வரை தன்னுடைய கோட்பாட்டிலும் முயற்சியிலும் வெற்றி கண்டுள்ளது உண்மையாவே பாராட்டத்தக்கதாகும்.

Advertisement