சொன்னா கேளுங்க. டி20 உலககோப்பை அணியில் இவரையும் சேருங்க. அதுதான் நல்லது – கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar
- Advertisement -

கடந்த 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இம்முறை தான் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது. அந்த அளவிற்கு இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு சுமாராகவே இருந்தது என்றே கூறலாம். ஏனெனில் இந்த ஆசிய கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு “சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணியானது அடுத்ததாக “சூப்பர் 4” சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தேவையில்லாமல் ஏகப்பட்ட மாற்றங்களை நிகழ்த்தி தோல்வியை பரிசாக பெற்றது.

IND vs SL

- Advertisement -

அதோடு ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் துவங்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இந்த ஆசிய கோப்பை தொடரில் வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்று அனைவரும் கூறி வந்த வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு பெரிய அளவில் திருப்திகரமாக இல்லை.

எனவே டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்னாள் வீரர்களும் இந்திய அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சு துறையில் ஏகப்பட்ட முன்னேற்றங்களை நாம் கண்டாக வேண்டும் என்றும் நிச்சயம் ஆஸ்திரேலிய மைதானங்களில் தீபக் சாகர் நமக்கு அவசியம் என்றும் கூறியுள்ளார்.

Deepak-Chahar

இது குறித்து அவர் கூறுகையில் : தீபக் சாகர் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வேண்டும். ஏனெனில் பொதுவாகவே ஆஸ்திரேலிய மண்ணில் அதிகமான பவுன்ஸ் மற்றும் ஸ்விங் ஆகியவை இருக்கும் என்பதனால் தீபக் சாகரின் பந்துவீச்சு அங்கு மிகச்சிறப்பாக இருக்கும். அதோடு பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட் வீழ்த்தும் அவரது திறமை நமக்கு தெரிந்தது.

- Advertisement -

எனவே நிச்சயம் என்னை பொருத்தவரை அவரை இந்திய அணியில் இணைத்தால் நமக்கு தான் அது நல்லது. தற்போதுள்ள இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு நன்றாக இருந்தாலும் தேவையான அளவிற்கு உள்ளதா என்று கேட்டால் சந்தேகம்தான். தீபக் சாகரை அணிக்குள் கொண்டு வருவதன் மூலமாக நமக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று கவாஸ்கர் கூறினார்.

இதையும் படிங்க : பிளேயர்ஸ் கிட்ட விராட் கோலி கூட அப்படி நடந்தது கிடையாது. ரோஹித் மீது ரசிகர்கள் வருத்தம் – காரணம் தெரியுமா?

சமீப காலமாகவே காயத்தால் அவதிப்பட்டு வரும் தீபக் சாகர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் முழுவதையும் காயம் காரணமாக தவறவிட்டார். அதனை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது கம்பேக் கொடுத்த அவர் ஆசிய கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement