ஐ.பி.எல் ஏலத்தில் இந்த 4 இந்திய வீரர்கள் கலந்துகொண்டால் 100 கோடிக்கு மேல் போவார்கள் – ராபின் உத்தப்பா

Uthappa
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ள வேளையில் இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ஐபிஎல் தொடரானது 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. அதன்படி இந்த தொடரானது மார்ச் 22-ஆம் தேதி துவங்க உள்ள வேளையில் இந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.

இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற மினி ஏலத்தில் வீரர்களுக்கான போட்டி கடும் அளவில் இருந்தது. அதில் உச்சபட்சமாக இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக மிட்சல் ஸ்டார்க் 24 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து பேட் கம்மின்ஸ் 20 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர்கள் நான்கு பேர் கலந்து கொண்டு இருந்தால் 100 கோடிக்கு மேல் சென்றிருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறிய அந்த நான்கு வீரர்கள் யாதெனில் : விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பும்ரா என்று குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வேளையில் இதுவரை 237 போட்டிகளில் விளையாடி 130 ஸ்டிரைக் ரேட்டுடன் 37 ரன்கள் சராசரியுடன் 7263 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று ரோகித் சர்மா கடந்த 2011 ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியை தலைமை தாங்கி ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்துள்ள வேளையில் இதுவரை 243 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 130 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 29 ரன்கள் சராசரியுடன் 6211 ரன்கள் குவித்துள்ளார். அதேபோன்று மற்றொரு மும்பை அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் இதுவரை 120 போட்டிகளில் விளையாடி 145 விக்கெட்டுகளை சாய்த்து உள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 : தரமான சிஎஸ்கே அணிக்கு – வலுவான மும்பை சவால் கொடுக்குமா? புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

அவர் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். நான்காவதாக சூரியகுமார் யாதவ் இதுவரை 130 போட்டிகளில் விளையாடி 143 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 31 ரன்கள் சராசரியுடனும் 3249 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாகவும் இருப்பதினால் இவர்கள் நான்கு பேருமே 100 கோடிக்கு மேல் ஏலம் போகி இருப்பார்கள் என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement