
ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடருக்கு முன்பாக ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் வெளியேற உள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. அவரை சிஎஸ்கே நிர்வாகம் டிரேடிங் முறையில் வாங்குவதற்கு முயற்சித்து வருவதாகவும் ஏற்கனேவே செய்திகள் வந்தன. அதே போல சிஎஸ்கே அணியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலக முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து விலகி சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ஏனெனில் ராஜஸ்தான் அணியில் தற்போது சாம்சனுக்கு டாப் ஆர்டரில் இடமில்லை என்று உத்தப்பா கூறியுள்ளார். மேலும் தோனியின் இடத்தை சாம்சன் மட்டுமே நிரப்பும் திறமையைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதே போல ராஜஸ்தானுக்கு நல்ல ஸ்பின்னர் தேவைப்படுவதால் அஸ்வின் சிஎஸ்கே அணியிலிருந்து விலக அங்கே விளையாட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி உத்தப்பா விளக்கியது பின்வருமாறு. “ராஜஸ்தான் அணிக்கு தற்போது ஓப்பனிங் இடத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் சூரியவன்சி உள்ளார்கள். புதிதாக வந்த சூர்யவன்சி பந்துகளை மைதானத்திற்கு வெளியே அடித்து நொறுக்குகிறார். ரியான் பராக் 3வது இடத்தில் விளையாட வாய்ப்புள்ளது”
“அதனால் சஞ்சு சாம்சன் எங்கே விளையாடுவார்? 4வது இடத்திலா? ஆனால் இந்தியாவுக்காக ஓப்பனிங் இடத்தில் விளையாடும் சாம்சன் ஐபிஎல் தொடரில் 4வது இடத்தில் விளையாட விரும்புவாரா? நிச்சயம் விரும்ப மாட்டார். எனவே சாம்சன் தம்முடைய பார்வையிலிருந்து இளம் வீரர்களுக்கு ஆதரவளிக்கும் ராஜஸ்தான் அணி மாற மாட்டார்கள் என்று நினைத்திருக்கலாம். அதனால் அங்கிருந்து நாம் நகர்ந்து வேறு அணியில் விளையாடலாம் என்று அவர் கருதலாம்”
“அவரை வைத்து சிஎஸ்கே அணிக்கு நல்ல தீர்வு காத்திருக்கிறது. ஒருவேளை அவரை சிஎஸ்கே வாங்க முடிந்தால் அது அவர்களுக்கு நன்றாக வேலை செய்யும். ஏனெனில் எம்எஸ் தோனி விரைவில் ஓய்வு பெற உள்ளதால் சஞ்சு அவருடைய இடத்தில் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட முடியும். இல்லையெனில் தற்சமயத்தில் டேவோன் கான்வே போன்றவரை சிஎஸ்கே விக்கெட் கீப்பராக விளையாட வைக்க பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க: இஷான் கிஷனும் இல்ல.. துருவ் ஜுரேலும் இல்ல.. சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக வரும் ஆர்.சி.பி வீரர் – விவரம் இதோ
“ஆனால் சாம்சன் வந்தால் சிஎஸ்கே அணிக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். ராஜஸ்தான் அணியில் ஹெட்மயர் மட்டுமே 6வது இடத்தில் ஃபினிஷராக உள்ளார். எனவே சாம் கரண், விஜய் சங்கர் ஆகியோருடன் அஸ்வினும் ராஜஸ்தானுக்கு செல்லலாம். ராஜஸ்தான் அணி இனிமேலும் நமக்கு சாம்சன் தேவையில்லை என்று கருதுவது போல் தெரிகிறது. அதே போல சாம்சனும் ராஜஸ்தானில் இருக்க விரும்பவில்லை. எனவே விரும்பாத வீரரை தக்க வைக்க வேண்டியதில்லை” என்று கூறினார்.