அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது அடுத்ததாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரராக இடம்பெறப்போகும் ஆர்.சி.பி வீரர் :
இம்முறை எதிர்வரும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர்கள் போட்டிகளாக நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
அந்த எட்டு அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஏ பிரிவில் : இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரராக இந்திய அணியில் யார் விளையாடப்போகிறார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே இஷான் கிஷன் பெயர்கள் அடிபட்டிருந்த வேளையில் தற்போது அவர்களை தாண்டி டி20 போட்டிகளுக்கான அணியில் ஜிதேஷ் சர்மா பேக்கப் வீரராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்ற போது பினிஷராக களமிறங்கி ஜிதேஷ் சர்மா அருமையாக விளையாடி இருந்ததார்.
இதையும் படிங்க : டேல் ஸ்டெயினின் மாபெரும் சாதனையை தகர்த்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் – விவரம் இதோ
அதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 147.1 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 100 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



