- Advertisement -
ஐ.பி.எல்

தோனி டெஸ்ட் ஆடல.. கீழ வர இதான் காரணம்.. இதுல அசத்துனா சிஎஸ்கே ஈஸியா ஜெய்க்கலாம்.. உத்தப்பா பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தடுமாறி வருகிறது. அந்தத் தோல்விக்கு பவர் பிளே ஓவர்களில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்காதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே போல சிறந்த ஃபினிஷராக கருதப்படும் தோனி கடைசிக்கட்ட ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய வருவது வெற்றிக்கு கை கொடுக்கவில்லை.

43 வயதாகும் தோனி முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார். அதனாலேயே தோனி கீழே பேட்டிங் செய்வதாகவும் ஃப்ளமிங் கூறியிருந்தார். இருப்பினும் பேட்டிங்கில் தோனி டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவதாக எதிரணி ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -

டெஸ்ட் கிடையாது:

அதன் காரணமாக தோனி ஓய்வு பெற வேண்டும் என்று எதிரணி ரசிகர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்நிலையில் தோனி டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடவில்லை என்றும் 43 வயதில் முடியாமல் கீழே பேட்டிங் செய்யவில்லை என்றும் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். மாறாக விரைவில் ஓய்வு பெற உள்ள தோனி மற்ற பேட்ஸ்மேன்களுக்கு இப்போதே பொறுப்பை கொடுத்துள்ளதாகவும் உத்தப்பா கூறியுள்ளார்.

மேலும் சென்னை மிடில் ஓவர்களில் அதிரடியாக ரன்கள் எடுக்காததே தோல்விக்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி விளக்கி பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியிடம் அதிரடியாக விளையாட தடுமாற்றம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஐபிஎல்’க்கு வெளியே கூட, தோனி மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்”

- Advertisement -

சிஎஸ்கே பிரச்சனை:

“சிஎஸ்கே கோப்பைக்காக போட்டியிடும் அணியாக மீண்டும் உருவாக்கப்படுவதால் வரும் ஆண்டுகளில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றிய தெளிவானம் புரிதலை தோனி மற்ற வீரர்களுக்கு வழங்கியுள்ளார் என்று நான் நம்புகிறேன். அதற்கான மாற்றம் தற்போது நடக்கிறது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்தப் போட்டியில் 9.8 – 9.9 என்ற விகிதத்தில் சிஎஸ்கே துவக்க வீரர்கள் ரன்களை அடிக்கத் துவங்கினார்கள்”

இதையும் படிங்க: 2025 தொடரில் இருந்து வெளியேறிய ருதுராஜ்.. எஞ்சியுள்ள போட்டிகளுக்கு தோனி கேப்டனாக அறிவிப்பு – வெளியான தகவல்

“பெரிய இலக்கை துரத்த நீங்கள் மிடில் ஓவர்களில் அசத்துவது அவசியம். ஆனால் 7 – 12 ஓவர்களில் சென்னை மிகவும் மெதுவாக விளையாடி குறைவாகவே ரன்கள் அடித்தது. பவர் பிளே முடிந்த பின்பும் நீங்கள் பெரிய ரன்கள் அடிக்க துவங்க வேண்டும். பவர் பிளே தாண்டி மிடில் ஓவர்களிலும் வெற்றி பெறுவது அவசியம். அதை சென்னை செய்யத் தவறினார்கள். அதனால் கடைசி 2 ஓவரில் அவர்களுக்கு 45 ரன்கள் தேவைப்பட்டது. ஒருவேளை அவர்கள் 2 மிடில் ஓவர்களில் 15 – 20 ரன்கள் அடித்திருந்தால் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 22 – 25 ரன்களாக மட்டுமே தேவைப்பட்டிருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -