2025 தொடரில் இருந்து வெளியேறிய ருதுராஜ்.. எஞ்சியுள்ள போட்டிகளுக்கு தோனி கேப்டனாக அறிவிப்பு – வெளியான தகவல்

Ruturaj and Dhoni
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடைசியாக 2023 ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் கோப்பையை கைப்பற்றி இருந்தது. அதற்கு அடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறி முழுநேர விக்கெட் கீப்பராக மட்டுமே தோனி விளையாடுகிறார். அதன் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் வெளியேற்றம்.. மீண்டும் கேப்டனான தோனி :

கடந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் கம்பேக் கொடுத்து தோனியை கோப்பையுடன் வழியனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த தொடரின் முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்த சென்னை அணியானது அதன் பின்னர் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி ரன் ரேட்டிலும் பின்தங்கி இருக்கிறது.

இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு 2025 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாகவும், அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக தோனி எஞ்சியுள்ள போட்டிகளில் செயல்படுவார் என்றும் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

கடந்த சில ஆட்டங்களுக்கு முன்னர் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து அவர் இரண்டு ஆட்டங்கள் விளையாடி இருந்தாலும் தற்போது அவரது காயம் மேலும் அதிகரித்துள்ளதால் இந்த எஞ்சியுள்ள தொடரில் இருந்து அவர் வெளியேறி சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி இந்த எஞ்சியுள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மீண்டும் தோனி கேப்டனாக செயல்படுவார் என்றும் அவரது தலைமையிலேயே இந்த தொடரை சிஎஸ்கே அணி எதிர்கொள்ளும் என்றும் அதிகாரவபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலி மாதிரி சாய் சுதர்சன் இதை ஈஸியா செய்றாரு.. அந்த அளவுக்கு பிராக்டீஸ் பண்றாரு – பார்த்திவ் படேல் கருத்து

இதன் காரணமாக மீண்டும் தோனி கேப்டனாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் கடந்த பல ஆண்டுகளாகவே சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்து வந்த ருதுராஜ் வெளியேறியுள்ளது ஒரு பெரிய பின்னடைவையும் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement