விராட் கோலி மாதிரி சாய் சுதர்சன் இதை ஈஸியா செய்றாரு.. அந்த அளவுக்கு பிராக்டீஸ் பண்றாரு – பார்த்திவ் படேல் கருத்து

Parthiv Patel
- Advertisement -

சுப்பன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் 5 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த அந்த அணி இந்த தொடரை பின்னடைவுடன் துவங்கியது.

விராட் கோலி மாதிரி சாய் சுதர்சன் அசத்துறாரு : பார்த்திவ் படேல்

ஆனால் அதன்பிறகு மும்பை, பெங்களூரு, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் என நான்கு அணிகளையும் எளிதாக வீழ்த்தி தற்போது புள்ளி பட்டியலில் மிகப்பெரும் ஆதிக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணியின் இந்த தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்த தொடரில் குஜராத் அணியின் சார்பாக துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சன் 5 போட்டிகளில் விளையாடி மூன்று அரைசதங்களுடன் 273 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரது சிறப்பான பேட்டிங் காரணமாகவே குஜராத் அணி எளிதான வெற்றிகளை பெற்று வருகிறது.

குஜராத் அணியின் பேட்டிங் தூணாக பார்க்கப்படும் அவர் வெகுவிரைவில் இந்திய அணியிலும் நிரந்தர இடம் பிடிப்பார் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் சாய் சுதர்சன் விராட் கோலி போல தொடர்ந்து நிலையான ரன் குவிப்பை வழங்குவதில் தனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் அந்த அளவிற்கு அவர் வலைப்பயிற்சி கடினமாக உழைக்கிறார் என குஜராத் அணியின் துணை பயிற்சியாளரான பார்த்திவ் பட்டேல் புகழாரம் சூட்டியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சாய் சுதர்சன் கடந்த ஒரு மாதமாக வெளிப்படுத்தி வரும் கடினமான உழைப்புக்கு பலனாக தான் அவரது ரன்கள் வந்து கொண்டிருக்கிறன. வலைப்பயிற்சியில் தீவிரமாக செயல்படும் அவர் நாமாக சென்று வெளியேற்றும் வரை தொடர்ந்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க : நான் நெனச்சது வேற.. ஆனா நடந்தது வேற.. டெல்லி அணியின் கோச்சானது குறித்து பேசிய – ஹேமங் பதானி

அந்த அளவிற்கு அவர் கடுமையாக மேற்கொள்ளும் பயிற்சியே போட்டிகளின் போது அவர் எளிதாக ரன் குவிக்க உதவுவதாக நினைக்கிறேன். அவர் தொடர்ந்து ரன் குவிப்பதில் எனக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. அந்த அளவிற்கு அவர் நேர்த்தியான பேட்டிங் டெக்னிக்கையும் வைத்திருக்கிறார் என பார்த்திவ் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement