இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்பட்ட சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் தொடரின் ஆரம்பத்திலேயே நான்கு தோல்விகளை சந்தித்து பெரிய பின்னடைவை சந்தித்து ஏமாற்றத்தை அளித்துள்ளனர். அதே வேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்படாத சில அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
டெல்லி அணியின் பயிற்சியாளரானது குறித்து பேசிய ஹேமங் பாதனி :
இந்த ஆண்டு டெல்லி அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருப்பதால் அந்த அணி கோப்பையை வெல்லவும் ஒரு வாய்ப்பு இருப்பதாக அனைவரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹேமங் பதானி தற்போது மிகச் சிறப்பாக அந்த அணியை வழிநடத்தி வரும் வேளையில் தனக்கு இந்த வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது? என்பது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
துபாய் கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நான் கோப்பையை வென்ற பின்னர் என்னை பலரும் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். இதன் காரணமாக நிச்சயம் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் எனக்கு ஏதாவது ஒரு ஐபிஎல் அணியில் இருந்து பேட்டிங் பயிற்சியாளர் வாய்ப்பாவது வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அந்த சமயத்தில் தான் என்னை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நிர்வாகம் அழைத்து உங்களை முதன்மை பயிற்சியாளராக நியமிக்க ஆலோசித்து வருகிறோம் உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்கள்.
அதற்கு நான் என்னுடைய பதிலை அளிக்க சிறிய விவாதத்திற்கு பிறகு என்னை தலைமை பயிற்சியாளராக அறிவித்து வாய்ப்பினையும் வழங்கினார்கள். இப்படி ஒரு பெரிய வாய்ப்பை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே வேளையில் நான் எந்த அணியையும் வீழ்த்திக் காட்டுவேன் என்று பேச்சில் சொல்லாமல் செயல்பாடுகளின் மூலம் பதிலளிக்க விரும்பினேன். அந்த வகையிலேயே தற்போது தொடர்ச்சியாக டெல்லி அணி வெற்றியும் பெற்று வருவது மகிழ்ச்சி என ஹமங் பதானி கூறினார்.
டெல்லி அணியின் தலைமை பயிற்சியளராக தற்போது செயல்பட்டு வரும் ஹேமங் பதானி இதற்கு முன்னதாகவே சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்காக டிஎன்பிஎல் பயிற்சியாளராக இருந்து கோப்பையை வென்றவர். அதுமட்டுமின்றி இலங்கை பிரீமியர் லீக்கில் ஜாப்னா கிங்ஸ் அணிக்காக தலைமை பயிற்சியாளராக இருந்தும் கோப்பை வென்று கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்.ஏ டி20 லீக்கிலும் இரண்டு முறை பேட்டிங் பயிற்சியாளராக இருந்து கோப்பையை வென்றிருந்தார்.
இதையும் படிங்க : ஹிட்மேன் ரோஹித்தின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கிங் கோலி – விவரம் இதோ
அது தவிர்த்து துபாய் கேபிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஒரே ஆண்டில் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இப்படி பல கோப்பைகளை வென்றதன் காரணமாகவே அவர் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



